பணிப்பெண் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தள்ளுபடி; தம்பதியர் விடுவிப்பு

பணிப்பெண் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தள்ளுபடி; தம்பதியர் விடுவிப்பு

2 mins read
d7c7a46d-a9b6-4339-89d0-40afdec81d61
-

பணிப்­பெண்­ணைத் துன்­பு­றுத்­தி­ய­தாக கண­வன், மனைவி மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­கள் தள்­ளு­படி செய்­யப்­பட்டு இரு­வ­ரும் விடு­விக்­கப்­பட்­ட­னர். 40 வயது திருவாட்டி நாச்­சம்மை செல்வ நாச்­சி­யப்­பன், அவ­ரது கண­வ­ரான 43 வயது திரு அரு­ணா­ச­லம் முத்­தையா மீது இனி அந்­தக் குற்­றச்­சாட்­டு­க­ளைச் சுமத்த முடி­யாது.

2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதிக்­கும் ஆகஸ்ட் 2ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட கால­

கட்­டத்­தில் மியன்­மா­ரைச் சேர்ந்த ஹிலா ஹிலா மியாங் என்ற பணிப்­பெண்ணை சிங்­கப்­பூ­ரர்­க­ளான திருவாட்டி நாச்­சம்­மை­யும் அவ­ரது கண­வ­ரும் துன்­பு­றுத்­தி­ய­தாக குற்­றம் சாட்­டப்­பட்­டது. இரு­வ­ருக்­கும் எதி­ராக 2020ஆம் ஆண்­டில் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

தம்­மீது சுமத்­தப்­பட்ட ஐந்து குற்­றச்­சாட்­டு­களை எதிர்த்து திரு­வாட்டி நாச்­சம்மை வழக்கு விசா­ரணை கோரி­னார். பணிப்­பெண்­ணின் முகத்­தில் அடித்­த­தா­க­வும் சூடான கரண்­டியை அவர் மீது வீசி­ய­தா­க­வும் திரு­வாட்டி நாச்­சம்மை மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

பணிப்­பெண்ணை உதைத்­த­தா­க­வும் குத்­தி­ய­தா­க­வும் திரு அரு­ணா­ச­லம் மீது மூன்று குற்­றச்­

சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லை­யில், இந்த வழக்கு சம்­பந்­த­மா­கப் புதிய ஆதா­ரம் கிடைத்­ததை அடுத்து, இரு­வ­ரை­யும் விடு­விக்க முடி­வெ­டுக்­கப்­பட்­ட­தாக தலை­மைச் சட்ட அதி­கா­ரி­யின் அலு­வ­ல­கம் தெரி­வித்­தது. ஆனால் அந்த ஆதா­ரம் குறித்து மேல் விவ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் திரு­வாட்டி நாச்­சம்­மை­யும் திரு அரு­ணா­ச­ல­மும் பேச

மறுத்­து­விட்­ட­னர்.

தம்­ப­தி­யர் இரு­வ­ரும் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளா­கக் கடு­மை­யான மன­வு­ளைச்­ச­லுக்கு ஆளா­ன­தா­க­வும் இந்த விவ­கா­ரத்­தைக் கெட்ட கன­வா­கக் கருதி அதை மறந்து வாழ்க்­கை­யைத் தொடர இரு­வ­ரும் விரும்­பு­வ­தா­க­வும் அவர்­

க­ளைப் பிர­தி­நி­தித்த வழக்­க­றி­ஞ­ரான திரு காளி­தாஸ் முரு­கை­யன் இம்­மா­தம் 2ஆம் தேதி­யன்று தெரி­வித்­தார். நீதி­மன்­றத்­தின் தீர்ப்பு தமது கட்­சிக்­கா­ரர்­க­ளுக்கு மன­நிம்­ம­தி­யை­யும் மகிழ்ச்­சி­யை­யும் தந்­தி­ருப்­ப­தாக அவர் கூறி­னார்.

வழக்கு கார­ண­மாக ஆசி­ரி­ய­ரான திரு­வாட்டி நாச்­சம்­மை­யின் பணி­கள் தடை­ப­ட­வில்லை என்­றார் அவர். அவர் அதே பள்­ளி­யில் கற்­பித்­து­ வ­ரு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார். தமக்கு ஆத­ர­வாக இருந்த அனை­வ­ருக்கும் அவர் நன்றி தெரி­விப்­ப­தாக திரு காளி­தாஸ் முரு­கை­யன் தெரி­வித்­தார்.