தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலு பாண்டான் பூங்கா இணைப்பின் மேலும் பல பகுதிகள் திறப்பு

1 mins read
1d0ddf25-1d98-4e5e-a48c-bb61bfc0499e
-

கிள­மெண்டி வட்­டா­ரத்­தில் உள்ள தேவைக்கு ஏற்ப கட்­டப்­படும் வீடு­க­ளுக்­கான (பீடிஓ) கட்­டு­மா­னத் தளத்­தில் ஏற்­பட்ட நிலச்­ச­ரி­வுக்­குப் பிறகு உலு பாண்­டான் பூங்கா இணைப்­பின் மேலும் பல பகு­தி­கள் நாளை திறக்­கப்­படும்.

கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று கிள­மெண்டி நார்த்­ஆர்க் கட்­டு­

மா­னத் தளத்­தின் ஒரு பகுதி இடிந்து விழுந்­ததை அடுத்து பூன் லே வே, ஆயர் ராஜா விரை­வுச்­சா­லை­யி­லி­ருந்து காமன்­வெல்த் அவென்யூ வெஸ்ட் மேம்­பா­லச் சாலைக்கு இட்­டுச் செல்­லும் பாதை மூடப்­பட்­டது.

நிலச்­ச­ரிவு கார­ண­மாக வழிப்­போக்­கர் ஒரு­வர் காய­ம­டைந்­தார்.

பூங்கா இணைப்­புப் பாதை­யின் சில பகு­தி­களும் சேத­ம­டைந்­தன. அரு­கில் உள்ள சுங்கை உலு பாண்­டான் கால்­வாய்க்­குள் மண் சரிந்­தது. கால்­வாய் இன்­னும் பழு­து­பார்க்­கப்­ப­டாத நிலை­யில் கன­மழை பெய்­தால் வெள்ள அபா­யம் இருப்­ப­தாக வீட­மைப்பு வள­ரச்­சிக் கழ­கம் நேற்று அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டது.

கனமழை பெய்தால் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் எச்சரித்துள்ளது.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்