வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்த ஒப்பந்ததாரருக்குத் தடை

வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்த ஒப்பந்ததாரருக்குத் தடை

1 mins read
21488ae2-e988-4661-aafd-989a9e963da9
-

அடுத்த மூன்று மாதங்­க­ளுக்கு வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்த லீ ஃபோங் கட்­டு­மா­னச் சேவைகள் நிறு­வ­னத்­துக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இம்­மா­தம் 1ஆம் தேதி­யன்று அந்த நிறு­வ­னத்­தின் ஊழி­யர் ஒரு­வர் வேலை செய்­து­கொண்­டி­ருந்­த­போது உய­ர­மான இடத்­தி­லி­ருந்து விழுந்து காய­ம­டைந்­தார்.

பாது­காப்­பற்ற வேலைச் சூழல் கார­ண­மாக அந்த ஊழி­யர் காய­முற்­ற­தாக அமைச்சு நடத்­திய விசா­ர­ணை­யில் தெரிய வந்­ததை அடுத்து, நிறு­வ­னத்­துக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. பாது­காப்­புக் குறை­பா­டு­கள் தொடர்­பாக நிறு­வ­னத்­தி­டம் விசா­ரிக்­கப்­பட்­டது.

அந்த ஊழி­யர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கி­றார்.