தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'போதைப்பொருள் குற்றத்துக்கான மரண தண்டனை அனைத்துலகச் சட்டத்துக்கு உட்பட்டது'

2 mins read
af61c69b-c942-4adf-bbf7-05714f793cb8
-

சட்ட நடை­மு­றைப்­படி, தகுந்த பாது­காப்பு அம்­சங்­க­ளு­டன் விதிக்­கப்­படும் மர­ண­தண்­ட­னைக்கு எதி­ராக, ஒரு­மித்த அனைத்­து­ல­கக் கருத்து இல்லை என்று சட்ட அமைச்­சும் உள்­துறை அமைச்­சும் நேற்று வெளி­யிட்ட கூட்டு அறிக்­கை­யில் தெரி­வித்­தன.

"ஒவ்­வொரு நாட்­டுக்­கும் அதன் குற்­ற­வி­யல் நீதிக் கட்­ட­மைப்பை நிர்­ண­யிக்­கும் இறை­யாண்மை உரிமை உள்­ளது. அது அந்­நாட்­டின் சூழ­லுக்­கும் அனைத்­து­ல­கச் சட்ட கோட்­பா­டு­க­ளுக்­கும் உட்­பட்­ட­தா­க­வும் இருக்­கும். அந்த உரிமை மதிக்­கப்­ப­ட­வேண்­டும்," என்று அந்தக் கூட்டு அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டது.

மர­ண­தண்­ட­னைக்கு எதி­ராக சிங்­கப்­பூர் இடைக்­கால தடை பிறப்­பிக்­க­வேண்­டும் என்று இரு அனைத்­து­லக லாப­நோக்­கமற்ற அமைப்­பு­க­ளின் கோரிக்­கைக்கு அமைச்­சு­க­ளின் கூட்­ட­றிக்கை பதி­ல­ளித்­தது.

அந்த இரு அமைப்­பு­களும் வெளி­யிட்ட அறிக்கை பல தவ­றான கருத்­து­க­ளை­யும் தவ­று­க­ளை­யும் கொண்­டுள்­ளது என்­றும் இது­போன்ற அறிக்­கை­களை வெளி­யி­டுவ­தற்­கும் முன்­பாக உண்­மை­களை அலசி ஆரா­ய­வும் அழைப்பு விடுக்­கப்­பட்­டது.

இன்­டர்­நே­‌‌ஷ­னல் கமி­‌‌ஷன் ஆஃப் ஜூரிஸ்ட் கடந்த மாதம் 9ஆம் தேதி­யன்று தற்­போது நிலு­வை­யில் உள்ள மரண தண்­ட­னை­களை நிறுத்­தி­வைக்­கும்­படி கோரிக்கை விடுத்­தி­ருந்­தது.

ஆகஸ்ட் 11ஆம் தேதி­யன்று மனித உரி­மைக்­கான அனைத்­து­ல­கச் சட்­டக் கழ­க­மும் இதே போன்று மரண தண்­ட­னைக்கு எதி­ராக இடைக்­கால தடை­யைக் கோரி­யது.

போதை­ப்பொ­ருள் கடத்­தும் குற்­றம் மரண தண்­டனை விதிப்­ப­தற்­கான அனைத்­து­ல­கச் சட்­டத்­துக்கு உட்­ப­ட­வில்லை என்று மேற்­கண்ட இரு லாப­நோக்­கமற்ற அமைப்­பு­களும் வலி­யு­றுத்­தி­

இி­ருந்­தன.

ஆனால் போதைப்­பொ­ருள் தொடர்­பான குற்­றங்­க­ளுக்கு மரண தண்­டனை விதிப்­பது அனைத்­து­ல­கச் சட்­டத்­துக்­குப் புறம்­பா­னது அல்ல என்­றும் பெரிய போதைப்­பொ­ருள் கடத்­தல் கும்­பல்­கள் சிங்­கப்­பூ­ரில் தங்­களை நிலை­நாட்­ட­ மு­டி­யா­மல் இருப்­ப­தற்கு மரண தண்­டனை உதவி உள்­ளது என்­றும் அமைச்­சு­கள் வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டது.