தீவு முழுவதும் வியாழக்கிழமை அன்று பொது எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும். முக்கிய தகவலுக்கான சமிக்ஞையாக ஒரு நிமிட நேரம் ஒலி நீடிக்கும் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. அன்று மாலை 6.20 மணிக்கு ஒலி எழுப்பப்படும். ஒலியை கேட்டவுடன் உள்ளூர் வானொலி அல்லது தொலைக்காட்சி ஒளிபரப்பில் இடம்பெறும் தகவலை மக்கள் கேட்டுகொள்ளலாம்.
எஸ்ஜி பாதுபாப்பு செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள தொலைபேசிகளிலும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும்.
பொது எச்சரிக்கை சமிக்ஞை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக படை கூறியது. ஒலியைக் கேட்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று அது சொன்னது.
எச்சரிக்கை ஒலி கடைசியாக இவ்வாண்டு பிப்ரவரி 15 அன்று எழுப்பப்பட்டது. அதே நாள் 1942ல் இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் படைகள் ஐப்பானியரிடம் சரணடைந்தை குறிக்க ஒலி எழுப்பப்பட்டது.

