தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜிஎஸ்டி உயரும்; ஆதரவுத் திட்டங்கள் கைகொடுக்கும் நிதி அமைச்சர்: கூடும் செலவை ஈடுசெய்ய நிலையான வருவாய் தேவை

3 mins read
a129b30d-85ff-4b65-ae3c-c71713eaf32c
பீஷானில் உள்ள ஜங்ஷன் 8 ஃபேர்பிரைஸ் பேரங்காடிக் கடையில் வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்குகிறார்கள். கோப்புப்படம் -

வரி வருவாய் 22%க்கும் அதிக மாகக் கூடி இருந்தாலும் ஜிஎஸ்டி வரி, திட்டமிடப்பட்டதைப் போல் அடுத்த ஆண்டு உயரும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

பணவீக்கச் சூழலிலும் ஜிஎஸ்டி அதிகரிப்பை ஈடுசெய்ய அரசாங்கம் கடப்பாடு கொண்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பெரும்­பா­லான சிங்­கப்­பூர் குடும்­பங்­களுக்குக் குறைந்­த­பட்­சம் ஐந்­தாண்டு­களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு பாதிப்பு ஏற்­ப­டா­மல் இருப்­பதை அர­சாங்­கம் உறுதி செய்­யும்.

குறைந்த வரு­மான குடும்­பத்­திற்குக் கிட்­டத்­தட்ட 10 ஆண்டு காலம் பாதிப்பு இருக்­காது. தேவை­எனில் உத­வித் திட்­டங்­களை அர­சாங்­கம் அதி­க­ரிக்­கும் என்­றும் திரு வோங் குறிப்­பிட்­டார்.

ஜிஎஸ்டி உயர்வுக்கான அவ சியத்தை விளக்கிய திரு வோங், வழக்­க­மான செல­வினத் தேவைகள் அதி­க­ரித்து வரு­கின்­றன என்றார்,

அவற்­றைச் சமா­ளிக்க நிலை­யான, கட்­டிக்­காக்­கக்­கூ­டிய வரு­வாய் ஏற்­பாடு அவ­சி­யம் என்ற திரு வோங், இந்த நிலை­யில், முத்­திரை வரி போன்ற ஆண்­டுக்­காண்டு ஏறி இறங்­கக்­கூ­டிய வரி வசூலை சிங்­கப்­பூர் சாந்­தி­ருக்க முடி­யாது என்று நாடா­ளு­மன்­றத்­தில் விளக்­கி­னார்.

2021-2022 நிதி ஆண்­டில் வசூ­லான வரி வரு­வாய் அதி­க­ரித்து இருக்­கிறது. அடுத்த ஆண்­டி­லும் அதற்கு அடுத்த ஆண்­டி­லும் ஜிஎஸ்டி வரியை உயர்த்த திட்­ட­மிடப்­பட்டு இருக்­கிறது.

வரி வசூல் அதி­க­ரித்து இருப்­ப­தால் ஜிஎஸ்டி வரி உயர்வு ஒத்தி வைக்­கப்­ப­டுமா என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கேட்­ட­தற்கு அளித்த பதி­லில் துணைப் பிர­த­மர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் ஜிஎஸ்டி வரி அடுத்த ஆண்­டில் 7%லிருந்து 8% கூடும். 2024ல் அது 9% ஆக உய­ரும். 2021-2022 நிதி ஆண்­டில் மொத்­தம் $60.7 பில்­லி­யன் வரி வசூ­லா­னது. இது முந்­திய ஆண்­டை­விட 22.4% அதி­கம்.

கொவிட்-19 கார­ண­மாக சென்ற நிதி ஆண்­டில் வரி வசூல் 7.3% குறைந்­தது என்று சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் சென்ற மாதம் தெரி­வித்து இருந்­தது.

அதோடு மட்­டு­மின்றி, 2021-22 நிதி ஆண்­டில் முத்­திரை வரி வசூல் அதி­க­மாக இருந்­த­தும் அந்த ஆண்டு அதிக வரு­மான வரி வசூ­லா­ன­தற்கு முக்­கிய கார­ணம்.

பண­வீக்­கம் கார­ண­மாக ஜிஎஸ்டி வரி உயர்வு ஒத்தி வைக்­கப்­ப­டுமா என்ற கேள்­விக்­கும் திரு வோங் பதி­ல­ளித்­தார்.

பண­வீக்­கம் தொடர்­பில் சிங்­கப்­பூ­ரர்­கள் அடை­யும் கவ­லையை அர­சாங்­கம் புரிந்­து­கொள்­கிறது என்று கூறிய அவர், கடந்த 10 ஆண்­டு­களில் சிங்­கப்­பூ­ரர்­கள் உண்­மை­யான சம்­பள உயர்வை அனு­ப­வித்து வந்­தி­ருக்­கி­றார்­கள் என்­றார்.

பண­வீக்­கத்­தைத் தாண்டி சம்­ப­ளம் கூடி­ய­தாக அவர் தெரி­வித்­தார்.

இந்த ஆண்­டுக்­கான சம்­பள அதி­க­ரிப்பு பற்றி இந்த ஆண்டு முடி­வில்­தான் தெரி­யும். ஆனால், பண­வீக்­கம் கூடி இருக்­கிறது. அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்பை ஈடு­செய்ய சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு அர­சாங்­கம் தொடர்ந்து ஆத­ரவு வழங்­கும் என்­றார் அவர்.

படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறையை விரி­வு­ப­டுத்தி அதன்­மூ­லம் குறைந்த வரு­வாய் ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளத்தை உயர்த்­தும் நடை­முறை தொட­ரும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

மக்­கள்­தொகை மூப்­ப­டை­வ­தால் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் செலவு கூடு­கிறது. அர­சாங்­கச் செல­வி­னம் அதி­க­ரிப்­ப­தற்கு இது முக்­கிய கார­ண­மாக இருக்­கிறது.

நாடு தனது பொரு­ளி­யலை வேகப்­ப­டுத்த வேண்­டிய தேவை இருக்­கிறது. பசுமை உரு­மாற்ற முயற்­சி­க­ளை­யும் முடுக்­கி­விட வேண்டி இருக்­கிறது என்­றார் அவர்.

மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் அர­சாங்­கச் செல­வி­னம் இப்­போது 18% ஆக இருக்­கிறது.

இது 2030ஆம் ஆண்டு வாக்­கில் 20% அல்­லது அதற்­கும் அதி­க­மா­கக் கூடும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

2022 வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் பல­த­ரப்­பட்ட வரு­வாய் நட­வ­டிக்கை­களைத் தான் அறி­மு­கப்­படுத்தி­ய­தற்கு இதுவே கார­ணம் என்­றார் திரு வோங்.