ஆசிரியர்களுக்காக குரல் கொடுத்த உறுப்பினர்கள்

ஆசிரியர்களுக்காக குரல் கொடுத்த உறுப்பினர்கள்

2 mins read
93260d37-82a7-4018-875f-ca0021bdb87b
-

சிங்­கப்­பூ­ரில் உள்ள நான்கு ஆசிரி­யர்­ தொழிற்­சங்­கங்­களும் ஓராண்டு காலத்­தில் 1,000க்கும் மேற்­பட்ட மனக்­குறை புகார்­களைப் பெற்று இருக்­கின்­றன.

அந்த மனக்­கு­றை­களில் மாண­வர்­க­ளின் நடத்­தையை நிர்­வ­கிப்­பது முதல் பெற்­றோர்­கள் திட்டு­வது, வேலை மதிப்­பீ­டு­கள், மன­நலப் பிரச்­சி­னை­கள், வாழ்க்­கைத் தொழில் முன்­னேற்­றம் வரை பலவும் உள்­ள­டங்­கும்.

நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அப்­துல் சமது அப்­துல் வகாப் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் இது பற்றி தெரி­வித்­தார்.

ஆசி­ரி­யர்­கள் இந்­தப் பிரச்­சினை­க­ளுக்­குத் தீர்­வு­காண அர­சாங்­கம் ஆத­ரவு அளித்து வரு­கிறது.

இருந்­தா­லும் மூன்று அம்­சங்­களில் மேலும் பல­வற்றை அர­சாங்­கம் செய்ய முடி­யும் என்று அவர் தெரி­வித்­தார்.

மாண­வர்­க­ளின் கட்­டொ ழுங்கை நிர்­வ­கிக்க மேலும் ஆதரவு தேவைப்­ப­டு­கிறது; வேலைக்­கும் வாழ்க்­கைக்­கும் இடை­யில் இன்­னும் சிறந்த முறை­யில் சம­நி­லை­யைச் சந்­திக்க ஆசி­ரி­யர்­க­ளுக்கு மேலும் உத­வ­லாம்;

ஆசி­ரி­யர்­க­ளின் பணிச்­சுமையைக் குறைக்க வேண்­டிய தேவை இருக்­கிறது என்று அவர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர் ஆசி­ரி­யர்­கள் சங்­கம், சிங்­கப்­பூர் மலாய் ஆசி­ரி­யர்­கள் சங்­கம், சிங்­கப்­பூர் சீன ஆசி­ரி­யர்­கள் சங்­கம், சிங்­கப்­பூர் தமிழ் ஆசி­ரி­யர்­கள் சங்­கம் ஆகி­ய­வற்றுக்கு ஆசி­ரி­யர்­க­ளின் புகார்கள் அனுப்­பப்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.

முன்­க­ளப் பணி­யாற்­றி­ய­தற்­காக இந்த ஆண்டு பிற்­ப­கு­தி­யில் தாதி­யர்­க­ளுக்கு ஊக்­கத்­தொகை வழங்­க­வி­ருக்­கிறது.

அதே­போ­லவே கொவிட்-19 காலத்­தில் ஆற்றிய சேவை களுக்காக ஆசி­ரி­யர்­க­ளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை தரு­வது பற்றி பரி­சீ­லிக்­கும்­படி அவர் அர­சாங்­கத்தை கேட்­டுக்­கொண்­டார்.

இதே கருத்தை ஜூரோங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பேட்­ரிக் டே எதி ரொலித்­தார்.

ஆசி­ரி­யர்­க­ளின் சம்­ப­ளத்தை அதி­க­ரிக்­கும் முயற்­சி­களை இவர் வர­வேற்­றார். இருந்­தா­லும் இது பிரச்­சி­னை­யில் ஒரு பகு­தி­தான் என்­றார் அவர்.

இவர் மூன்று யோச­னை­களை முன்வைத்தார். கல்­வித் துறை­யா­ளர்­க­ளுக்குக் கல்­விச் சேவைக்கு அப்­பா­லும் தொழில்­துறை அனு­பவ பயிற்சி கிடைக்க வாய்ப்பு வழங்க வேண்­டிய தேவை இருக்­கிறது;

ஒவ்­வொரு பள்­ளி­யும் தனது சொந்த மதிப்­பீட்­டைக் கொண்­டிருப்­ப­தற்­குப் பதி­லாக தேர்வு வினாத் தாட்­களைக் குழு­ம­மாக உரு­வாக்­க­லாம்;

வேலை நில­வர மேம்­பா­டு­களை இதர எல்லா கல்­வி­யா­ளர்­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்த வேண்­டும் என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.

இதற்­குப் பதி­ல­ளித்த கல்வி, மனி­த­வள துணை அமைச்­சர் கான் சியாவ் ஹுவாங், பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­களும் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­க­மும் தங்­கள் ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளத்தை மறு­பரி­சீ­லனை செய்து வரு­வ­தா­கக் கூறி­னார்.

மன­ந­லம் தொடர்­பில் ஆசி­ரி­யர்­க­ளுக்கு உதவ கல்வி அமைச்சு செயல்­பட்டு வரு­கிறது என்று கூறிய திரு கான், ஆசி­ரி­யர்­களுக்குத் தொடர்ந்து நல்ல ஆத­ரவு கிடைக்­கும் என்று உறுதி தெரிவித்தார்.

அவர்­க­ளு­டைய பணிச்­சுமை சமாளிக்கக்­கூ­டிய நிலை­யில் தொடர்ந்து இருந்துவரும் என்­பதை உறு­திப்­ப­டுத்த அர­சாங்­கம் கடப்­பாடு கொண்­டுள்­ள­தா­க அவர் குறிப்பிட்டடார்.