சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் உல்லாசப் படகு முனையம் நடத்துவோருக்கான விதிமுறைகளை சிங்கப்பூர் கடல்துறை துறைமுக ஆணையத்திடம் இருந்து தன் நிர்வாகத்தின்கீழ் எடுத்துக்கொள்ளும்.
சிங்கப்பூர் இந்த வட்டாரத்தின் முன்னணி சுற்றுலாப் பயண மையமாகத் திகழ விரும்புகிறது. அதன் உல்லாசப் படகு பயணத் துறையை மேம்படுத்த இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.
இந்த இலக்கை நிறைவேற்றும் வகையில் இங்குள்ள படகுத் துறை முனையங்கள் செயல்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த பயணத் துறைக் கழகம் விதிமுறைகளை தன்வசம் எடுத்துக்கொள்கிறது.
இந்த நடவடிக்கை காரணமாக உயர்தர சேவைகளை உறுதிப்படுத்த பயணத்துறைக் கழகத்திற்கு அதிகாரம் இருக்கும்.
வரம்புக்குட்பட்ட எண்ணிக்கையில் இருக்கும் அணைகரைகளை கூடியபட்சம் அனுகூலமான முறையில் பயன்படுத்திக்கொள்ள வழி ஏற்படும் என்று வர்த்தக, தொழில் துறை அமைச்சர் எல்வின் டான் நேற்று நாடாளுமன்றத்திதல் தெரி வித்தார்.

