தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விருந்தோம்பல் துறையில் புதிய பயிற்சித் திட்டம்

2 mins read
8142e59b-f7ac-41ee-bbc0-ce6473eff25e
-

ஷங்­ரிலா ராசா செந்­தோசா ஹோட்­டலில் வேலை பயிற்­சிக் காலத்­தில் குமாரி இங் ஜிங் லிங் (படம்) அலு­வ­லக முகப்பு பணி­யா­ளர், ஹோட்­டல் அறை துப்­பு­ர­வா­ளர் எனப் பல்­வேறு பிரி­வு­களில் வேலை பார்த்­தார்.

இந்­தப் பயிற்­சித் திட்­டத்­தின் பய­னாக அவர் ஹோட்­டல் துறை பற்றி நன்கு புரிந்­து­கொண்­டார். இதைத் தொடர்ந்து 20 வய­தான குமாரி இங் ஹோட்­டல், தங்­கு­மிட துறை­யில் ஊழி­ய­ரணித் திறன்­கள் சான்­றி­தழ் திட்­டத்­தின்­கீழ் பட்­ட­யம் பெற­வல்ல புதிய பயிற்­சித் திட்­டத்­தில் சேர முடிவு செய்­தார்.

"பயிற்­சித் திட்­டத்­தின் வாயி­லாக எனக்கு உண்­மை­யி­லேயே ஹோட்­டல் துறை­யில் ஆர்­வம் மிகு­தி­யாக இருப்­பதை உணர்ந்­தேன். அத­னால் அது­பற்றி மேலும்

தெரிந்­து­கொள்ள ஆசை­யாக உள்­ளது," என்றார் உள்­ளூர் மற்­றும் அனைத்­து­லக வரு­கை­யா­ளர்­க­ளு­டன் பழ­கும் வாய்ப்­புப் பெற்­றுள்ள குமாரி இங்.

இந்­தப் பயிற்­சித் திட்­டம் 'ஹோம் அப்­ரென்­டி­ஷிப் டிப்­ளோமா புரோ­கி­ராம்' எனப்படும் ஊழி­யரணித் திற­னா­ளர்­கள் சான்­றி­தழ் திட்­டத்­தின்­கீழ் நடத்­தப்­படும் மூன்று திட்­டங்­களில் முதலாவ தாகும். இந்­தப் பயிற்­சித் திட்­டங்­கள் சிங்­கப்­பூர் ஹோட்­டல் சங்க பயிற்­சிப் பிரி­வான ஷாடெக் விருந்­தோம்­பல் கல்­லூ­ரி­யால் ஆகஸ்ட் மாதம் தொடங்­கப்­பட்­டது.

இது தவிர உணவு சேவை (சமை­யல் கலை) பிரி­வி­லும் பய­ணத்­துறை (நிகழ்ச்சி ஏற்­பாடு, நடத்­து­தல்) பிரி­வி­லும் நடத்­தப்­பட உள்ள பட்­ட­யப் பயிற்­சித் திட்­டம் இனி படிப்­ப­டி­யாக இந்த ஊழி­ய­ரணித் திற­னா­ளர்­கள் சான்­றி­தழ் திட்­டத்­தின்­கீழ் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

இதன் தொடர்­பில் ஜூரோங் ஈஸ்ட் ஷாடெக்­கில் உள்ள தேவன் நாயர் வேலைத் திறன், வேலைத் தகுதிக் கழகத்தில் தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சும் 12 ஹோட்­டல்­களும் புரிந்­து­ணர்­வுக் குறிப்பு ஒன்­றில் கையெ­ழுத்­திட்­டன.

இதன்­மூ­லம் இந்த ஹோட்­டல்­கள் தொழிற்­துறை சார்ந்த பிரத்­தி­யேக பயிற்­சித் திட்­டத்தை வழங்கு­வ­து­டன் பயிற்­சிக்கு வரு­வோரை ஊழி­ய­ர­ணிக்கு தயார் செய்­யும் வகை­யில் பயிற்­சி­ய­ளிக்­கும்.

குமாரி இங் இந்த 18 மாத கால பயிற்­சித் திட்­டத்­தில் பங்­கேற்­கும் 20 பேரில் ஒரு­வர்.

இந்­தப் பயிற்­சிக் காலம் அக்­டோ­பர் மாதம் தொடங்­கும்.