உடற்குறையுள்ளோருக்குத் தேவை யான அனைத்து வகை சேவைகளும் கிடைக்கும் இடம் 'எனேபலிங் வில்லேஜ்'.
லெங்கொக் பாருவில் புதிதாக நான்கு மாடிக் கட்டடம் கட்டப்பட்டு இது விரிவாக்கப்படுகிறது.
புதிய கட்டடத்தை எஸ்ஜி எனேபல் அமைப்பு நிர்வகிக்கிறது. விரிவாக்கத்துக்கான கட்டுமானப் பணிக்கு $10 மில்லியன் நிதி திரட்டும் திட்டத்தை அது நடத்துகிறது.
கட்டுமானப் பணிகள் இவ்வாண்டுக்குள் தொடங்கி 2024ஆம்
ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவாக்கப்படும் பகுதியைப் பயன்படுத்தி மேலும் பலருக்குச் சேவையாற்ற முடியும் என்று எஸ்ஜி எனேபலின் தலைமை நிர்வாகி கூ ஜியோக் பூன் தெரிவித்தார்.
உடற்குறையுள்ளோரை வேலையில் அமர்த்தும் வர்த்தக அணுகுமுறைகளை மேம்படுத்தவும் எஸ்ஜி எனேபல் அமைப்பு இலக்கு
கொண்டுள்ளது.
உடற்குறையுள்ளோரின் கலைத் திறனை மேம்படுத்துவதில் புதிய இடம் கவனம் செலுத்தும் என்று திருவாட்டி கூ தெரிவித்தார்.
உடற்குறையுள்ளோர் மற்றவர்
களைச் சார்ந்திருக்காமல் தன்னிச்சையாக வாழும் திறன்களை வலுப்படுத்தவும் அவர்களைப்
பராமரிப்பவர்கள் மற்றும் குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவவும் புதிய இடம் செயல்படும் என்றார் அவர்.
புதிய கட்டடத்தில் கலைக்
கூடம் ஒன்று அமைக்கப்படும். உடற்குறையுள்ளோரின் கலைப்
படைப்புகள் அங்கு காட்சிக்கு வைக்கப்படும். அத்துடன் கலைகள் தொடர்பான பயிற்சிகளும் அங்கு அளிக்கப்படும். புத்தாக்கமிக்க திட்டங்களை நடத்த மேலும் பல அமைப்புகளுடன் எஸ்ஜி எனேபல் இணைந்து செயல்படும்.

