ஐந்து இடங்களில் மின்னியல் சாலைக் கட்டணம் கூடும்

ஐந்து இடங்களில் மின்னியல் சாலைக் கட்டணம் கூடும்

1 mins read
b1bc4e19-655c-42e5-8a74-305a420e3910
செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் மின்னியல் சாலைக் கட்டணம் உயரும். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் ஐந்து இடங்களில் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதியிலிருந்து 'இஆர்பி' எனும் மின்னியல் சாலைக் கட்டணம் ஒரு வெள்ளி அதிகரிக்கும்.

போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.

நகரை நோக்கிச் செல்லும் ஆயர்-ராஜா விரைவுச்சாலையில் அலெக்சாண்டிரா சாலைக்கு முந்திய பகுதி மற்றும் ஜூரோங் டவுன்ன்ஹாலுக்குப் பிறகு வரும் பகுதி, பிராடல் சாலைக்குப் பிறகு வரும் தெற்கே போகும் மத்திய விரைவுச்சாலைப் பகுதி, தெற்கு நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையையும் தீவு விரைவுச்சாலையையும் இணைக்கும் சாலை, காலாங் பாரு பகுதியில் உள்ள தீவு விரைவுச்சாலையின் பகுதி, தீவு விரைவுச்சாலைக்குப் பிறகு வரும் வடக்கே போகும் தீவு விரைவுச்சாலைப் பகுதி ஆகியவற்றில் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதியிலிருந்து மின்னியல் சாலைக் கட்டணம் ஒரு வெள்ளி அதிகரிக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமையன்று (13 செப்டம்பர்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.