நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளுக்கு ஊக்குவிப்பு

வாரத்­திற்கு நான்கு நாள் வேலை செய்­வது உட்­பட நீக்­குப்­போக்­கான வேலை நடை­மு­றை­க­ளுக்கு மாற நிறு­வ­னங்­களும் ஊழி­யர்­களும் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர் என்று மனி­த­வள துணை அமைச்­சர் கான் சியோவ் ஹுவாங் தெரி­வித்­துள்­ளார்.

"மற்ற வேலை ஏற்­பா­டு­க­ளைப்­போல, நான்கு நாள் வேலை வார­மா­னது சில ஊழி­யர்­க­ளுக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் நல்ல ஏற்­பாடாக விளங்­க­லாம். மற்­ற­வர்­களுக்கு அப்­படி அமை­யா­மல் போக­லாம்.

"நீக்­குப்­போக்­கான மனப்­பான்­மையை நாம் கொண்­டி­ருக்க வேண்­டும். தங்­க­ளது தொழி­லின், ஊழி­யர்­க­ளின் தேவை­க­ளுக்கு உகந்த சிறந்த வேலை ஏற்­பா­டு­களை அடை­யா­ளம் கண்டு, அவற்­றைக் கடைப்­பி­டிக்­கும்­படி நிறு­வனங்­க­ளை­யும் ஊழி­யர்­க­ளை­யும் மனி­த­வள அமைச்­சும் முத்­த­ரப்­புப் பங்­கா­ளி­களும் ஊக்­கு­விக்­கின்­றன," என்று திரு­வாட்டி கான் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் நான்கு நாள் வேலை வார நடை­மு­றைக்­கான சாத்­தி­யம் குறித்து ஆரா­யப்­பட்டு வரு­கி­றதா என்­றும் அதன் பயன்­களை­யும் சவால்­க­ளை­யும் ஆரா­யும் வகை­யில் மனி­த­வள அமைச்சு சொந்த ஆய்வை மேற்­கொள்­ளுமா என்­றும் ராடின் மாஸ் தொகுதி எம்.பி. மெல்­வின் யோங் கேட்­டார்.

அதற்­குப் பதி­ல­ளித்த திரு­வாட்டி கான், வெளி­நி­று­வ­னங்­கள் அத்­த­கைய ஆய்­வு­களை மேற்­கொள்­கின்­ற­னவா என மனி­த­வள அமைச்சு அறிந்­தி­ருக்­க­வில்லை என்­றார்.

அதேவேளை­யில், அயர்­லாந்து, ஜப்­பான், ஸ்பெ­யின் போன்ற நாடு­களில் நான்கு நாள் வேலை வாரம் தொடர்­பான முன்­னோ­டித் திட்­டங்­கள் குறித்து தக­வல்­கள் வெளி­யா­கி­யி­ருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

நான்கு நாள் வேலை வாரத் திட்­டத்­தின் விளை­வு­கள் சாதக பாத­க­மாக இருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், உற்­பத்­தித்­தி­றன், தொழில்­சார் செல­வு­கள், ஊழி­யர் நல்­வாழ்வு போன்­ற­வற்­றின் மீதான தாக்­கங்­கள் அக்­க­றைக்­கு­ரி­ய­வை­யாக இருக்­கின்­றன என்­றும் திரு­வாட்டி கான் சொன்­னார்.

துறை, வேலை சார்ந்து, சில இடங்­களில் உற்­பத்­தித்­தி­றன் மேம்­பட்­டுள்­ள­தா­கத் தக­வல்­கள் கூறு­கின்­றன அவர் சொன்­னார்.

பொதுத் துறை­யில் இத்­த­கைய முன்­னோ­டித் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தி, சோதித்­துப் பார்க்க அர­சாங்­கம் நோக்­கம் கொண்­டி­ருக்­க­வில்லை என்­றும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!