முதல் நாளில் 1,000 பயணிகளைக் கையாண்டது

முதல் நாளில் 1,000 பயணிகளைக் கையாண்டது

2 mins read
6e695982-d779-4429-9f57-490aedce1ce4
சாங்கி விமான நிலையம் நான்காம் முனையத்தின் புறப்பாட்டுப் பகுதியில் நேற்று காணப்பட்ட பயணிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஈராண்டுகளுக்குப் பிறகு சாங்கி விமான நிலைய நான்காம் முனையம் மீண்டும் திறப்பு

கொவிட்-19 பெருந்­தொற்று கார­ண­மாக பய­ணி­க­ளின் எண்­ணிக்கை சரிந்­த­தால் மூடப்­பட்ட சாங்கி விமான நிலையத்தின் நான்­காம் முனை­யம், ஈராண்டு இடை­வே­ளைக்­குப் பிறகு நேற்று மீண்­டும் திறக்­கப்­பட்­டது. முதல் நாளான நேற்று ஏறக்­கு­றைய 1,000 பய­ணி­களை­யும் ஐந்து விமா­னச் சேவை­களை­யும் முனை­யம் கையாண்­டது. வரும் வாரங்­களில் விமா­னப் போக்கு­வரத்து மேலும் அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்த முனை­யத்­தில் செயல்­பாடு­க­ளைத் தொடங்­கிய 16 விமான நிறு­வ­னங்­களில் கேத்தே பசி­பிக்­கும் கொரி­யன் ஏரும் அடங்­கும்.

ஹாங்­காங்­கில் இருந்து கேத்தே பசி­பிக் விமா­னம் CX739ல் பய­ணம் மேற்­கொண்­டோர் நேற்று பிற்­ப­கல் 2.38 மணிக்கு நான்­காம் முனை­யத்­திற்கு வந்­தி­றங்­கி­னர். அவர்­களுக்கு ஆர்க்­கிட் மலர்­கள், நினைவுப் பொருள்­கள் வழங்­கப்­பட்­டன.

முனை­யத்­தில் செயல்­பா­டு­கள் சுமூ­க­மாக அமைந்­தன. முனை­யத்­தி­லி­ருந்து புறப்­பட்ட, இங்கு வந்­தி­றங்­கிய பய­ணி­கள் குடி­நு­ழை­வுச் சோதனை சுமூகமாக இருந்­த­தா­கக் கூறி­னர்.

சில கடை­கள் தொடர்ந்து மூடப்­பட்­டி­ருந்­தா­லும், 30க்கும் மேற்­பட்ட சில்­லறை விற்­ப­னைக் கடை­களும் உண­வ­கங்­களும் இயங்­கின. வரும் மாதங்­களில் கூடு­த­லான கடை­கள் கட்­டங்­கட்­ட­மாக திறக்­கப்­ப­டு­வதை எதிர்­பார்க்­க­லாம்.

நான்­காம் முனை­யத்­தில் செயல்­பா­டு­கள் சுமூ­க­மாக அமை­வதை உறு­தி­செய்ய விமான நிலை­யங்­களு­ட­னும் விமான நிலை­யப் பங்­கா­ளித்­துவ அமைப்­பு­க­ளு­ட­னும் சேர்ந்து சாங்கி விமான நிலை­யக் குழு­மம் கடந்த மே மாதம் முதல் செயல்­பாட்­டுத் தயார்­நிலை சோத­னை­களை நடத்தி வந்­துள்­ளது. இதில் 3,000 பேர் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­னர். பய­ணப்­ பை­க­ளைக் கையாளும் முறை, தானி­யங்கி பய­ணிப் பதிவு இயந்­தி­ரங்­கள், பாது­காப்­புப் பரி­சோ­தனை நடை­முறை போன்­றவை சரி­யாக இயங்­கு­கின்­ற­னவா என்­பது பற்றி பரி­சோ­திக்­கப்­பட்­ட­தாக சாங்கி விமான நிலை­யக் குழு­மத்­தில் விமான நிலைய செயல்­பாட்டு நிர்­வா­கத்­திற்­கான மூத்த துணைத் தலை­வர் ஆங் சியூ மின் கூறி­னார்.

பய­ணி­கள் எண்­ணிக்கை அதி­க­ரித்த சூழ­லில் செயல்­பா­டு­க­ளைச் சமா­ளிக்க பாவ­னைப் பயிற்­சி­களும் நடத்­தப்­பட்­ட­தாக அவர் சொன்­னார்.

முனை­யம் நான்கு, ஆண்­டுக்கு 16 மில்­லி­யன் பய­ணி­க­ளைக் கையாளும் ஆற்­ற­லைக் கொண்­டு உள்­ளது.