'பிளவுபட்ட உலகம் அறிவியலில் ஒத்துழைப்பைப் பாதிக்கக்கூடும்'

'பிளவுபட்ட உலகம் அறிவியலில் ஒத்துழைப்பைப் பாதிக்கக்கூடும்'

1 mins read
5bde88f1-136b-4028-89e8-b1cffe11e20c
-

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு அப்பாற்­பட்டு, மனித­கு­லம் எதிர்­கொள்­ளும் நீண்ட­கா­லப் பிரச்­சி­னை­யாக பரு­வ­நிலை மாற்­றம் உள்­ளது. இதற்கு எதி­ரான பதில் நட­வ­டிக்­கைக்கு பிள­வு­பட்ட உல­கம் தடை­யாக அமை­யக்­கூ­டும்.

அறி­வி­யல் கண்­டு­பி­டிப்­பு­க­ளின் வேகம், செலவு, ஒன்று மற்­றொன்றை சார்ந்­தி­ருக்­கும் நிலை, பாது­காப்பு ஆகி­ய­வற்­றுக்கு பிள­வு­பட்ட உல­கம் குறிப்­பி­டத்­தக்க பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் என்று வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கிருஷ்­ணன் கூறி­யுள்­ளார்.

'நோபெல் பரிசு பெற்றோர் கலந்து­ரை­யா­டல் 2022: நாம் விரும்­பும் எதிர்­கா­லம்' எனும் நிகழ்ச்­சி­யில் அவர் நேற்று பேசி­ய­போது இத­னைச் சொன்­னார்.

உக்­ரே­னில் நில­வி­வ­ரும் போர் போன்ற நிகழ்­வு­கள் உயி­ரு­டற்­சேதம் மட்­டு­மின்றி அறி­வி­யல் துறை­யில் சேர்ந்து இயங்­கு­வ­தற்­கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

ஆசிய மருத்­துவ மாண­வர் சங்கத்­து­ட­னான பங்­கா­ளித்­துவ முயற்­சி­யில் நோபெல் பரிசு அவுட்ரிச் அமைப்பு, சிங்­கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழக யோங் லூ லின் மருத்­து­வப் பள்ளி ஏற்­பாடு செய்த இந்­தக் கலந்­து­ரை­யா­டல் ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்­தில் நடை­பெற்­றது.

நோபெல் பரிசு கலந்­து­ரை­யா­ட­லைப் பயன்­ப­டுத்தி ஒரு­வர் மற்றொரு­வ­ரி­டம் இருந்து கற்­றுக்­கொள்ள மாண­வர்­க­ளி­டம் டாக்­டர் விவி­யன் வலி­யு­றுத்­தி­னார்.

நோபெல் பரிசு பெற்­ற­வர்­கள் தங்­க­ளு­டன் அறி­வி­யல் சார்ந்த புரி­த­லைக் கொண்டு வரும் அதே வேளை­யில், பரந்த உல­கில் முக்­கி­ய­மான பண்­பு­ந­லன்­க­ளை­யும் கொண்­டுள்­ள­னர் என்­றார் அவர்.

நோபெல் பரிசு பெற்ற எட்­டுப் பேர் இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­ற­னர். அவர்­களில் இந்­திய ஆர்­வ­லர் கைலாஷ் சத்­யார்த்­தி­யும் அடங்­கு­வார்.

குழந்தை தொழி­லாளர் குறித்து அவரது முயற்சிகளுக்காக 2014ல் நோபெல் அமை­திப் பரிசை அவர் வென்­றார்.