ஆய்வு: மின்னிலக்கமயமாதல் மூலம் மனிதவளப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் நிறுவனங்கள்

ஆய்வு: மின்னிலக்கமயமாதல் மூலம் மனிதவளப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் நிறுவனங்கள்

1 mins read
1dc5d88c-5374-4ede-9e41-2b52c1f4ebdf
-

இவ்­வாண்டு பெரும்­பா­லான வர்த்­த­கங்­கள் லாபம் ஈட்­டலாம் என்பதை எதிர்­பார்க்­கின்­றன. எனி­னும், செல­வி­னங்­கள் அதி­க­ரித்து வரு­வது குறித்து அவை கவலை தெரி­வித்­துள்­ளன.

கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சிங்­கப்­பூர் சீனர் வர்த்­தக, தொழிற்­சபை நடத்­திய வர்த்­தக ஆய்­வில் இந்த முடி­வு­கள் தெரி­ய­வந்­துள்­ளன. இந்த ஆய்­வில் பங்­கெ­டுத்த 1,000க்கும் அதி­க­மான நிறு­வ­னங்­களில் 90 விழுக்­காடு சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள்.

ஆய்வு முடி­வு­களை நேற்று பகிர்ந்த தொழிற்­ச­பைத் தலை­வர் கோ சூன் கெங், கொவிட்-19 பெருந்­தொற்­றின் தாக்­கத்­தி­லி­ருந்து பொது­வாக வர்த்­த­கங்­கள் மீண்டு வரு­கின்­றன என்று கூறி­னார். ஆய்­வில் பங்­கெ­டுத்­த­வர்­களில் 38 விழுக்­காட்­டி­னர் தங்­கள் வரு­வாய் அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கின்­ற­னர். ஒப்­பு­நோக்க, கடந்த ஆண்டு இந்த விகி­தம் 26 விழுக்­கா­டாக இருந்­தது.

ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட நிறு­வ­னங்­களில் 72 விழுக்­காடு நிறு­வ­னங்­கள், இவ்­வாண்டு தாங்கள் லாபம் ஈட்­டலாம் என்பதை எதிர்­பார்க்­கின்­றன.

எனி­னும், 75 விழுக்­காடு நிறு­வனங்­கள் செல­வி­னம் அதி­க­ரித்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டன. கடந்த ஆண்டு இந்த விகி­தம் 57 விழுக்­கா­டாக இருந்­தது.

மனி­த­வள தேவை­க­ளைக் குறைக்க, 54 விழுக்­காடு நிறு­வனங்­கள் தங்­கள் வர்த்­த­கங்­களை உரு­மாற்ற, தானி­யக்­க­ம­ய­மாக்க, அல்­லது மின்­னி­லக்­க­ம­ய­மாக்க இருப்­பதா­கக் கூறின.