கூடுதல் ஊழியர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்கள்

கூடுதல் ஊழியர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்கள்

1 mins read
0ac2d8b6-fd89-4257-8919-70faf13a648c
-

சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் ஏறக்­கு­றைய 50 விழுக்­காட்டு நிறு­வனங்­கள் இந்த ஆண்­டின் நான்­காம் காலாண்­டில் கூடு­த­லான ஊழி­யர்­களை பணி­யில் சேர்க்­கத் திட்­ட­மி­டு­கின்­றன. அண்­மைய ஆய்­வில் இது தெரி­ய­வந்­தது.

'மேன்­ப­வர் குருப்' எனும் ஆள்சேர்ப்பு நிறு­வ­னம் 510 நிறுவனங்களிடம் இந்­தக் கருத்­தாய்வை நடத்­தி­யது.

நெடு­நாள் நிரப்­பப்­ப­டாத காலி­யி­டங்­களில் புதிய ஊழி­யர்­க­ளைப் பணி­ய­மர்த்­த சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் முனைந்துள்ளதால், ஆள்சேர்ப்பு நட­வ­டிக்கை தொடர்ந்து அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தொழில்நுட்பம், நிதி போன்ற துறைகளில் ஊழியர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். கல்வி, சுகாதாரம், சமூக சேவை, கட்டுமானம் போன்றவற்றில் தேவை குறைவு.