சுவா சூ காங்கில் 12 வயதுச் சிறுவனைக் கார் மோதியது

சுவா சூ காங்கில் 12 வயதுச் சிறுவனைக் கார் மோதியது

2 mins read
4c587695-c322-4f3f-9766-b237c56c1bf2
-

சுவா சூ காங் அவென்யூ 7ல் சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 7.45 மணி­ய­ள­வில் 12 வய­துச் சிறு­வனை கார் மோதி­யது.

சம்­ப­வத்­தை­ய­டுத்து சிகிச்­சைக்­காக அச்­சி­று­வன் தேசி­ய பல்­கலைக்­க­ழக மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டான்.

அப்­போது சிறு­வன் சுய நினை­வு­டன் இருந்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

தனது மகன் நபில் எல்­ரிஸ்கி புட்­ரா­விற்கு முழங்­கால் மூட்­டில் அறுவை சிகிச்சை செய்­யப்­பட்­ட­தா­க­வும் மற்­ற­படி அவ­னது உடல் நிலை சீராக இருப்­ப­தா­க­வும் சிறு­வ­னின் தாயார் திரு­வாட்டி நோரா ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­தார்.

நபிலுக்குத் தலை­யி­லும் அடி­பட்­டி­ருந்­த­தால் தானும் குடும்பத்தினரும் மிகவும் கவ­லைப்­பட்­ட­தா­கக் கூறிய அவர், உள்­கா­யம் ஏதும் இல்லை என்று மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­தா­கக் குறிப்­பிட்­டார்.

சிறு­வன் நபில் சாலை­யைக் கடந்து தனது தாத்தா வீட்­டிற்­குச் சென்று பின்­னர் வீடு திரும்­பிக்­கொண்­டி­ருக்­கை­யில் விபத்து ஏற்­பட்­ட­தா­கத் திரு­வாட்டி நோரா கூறி­னார். வழக்கமாக அவனுடன் செல்லும் தாயார் அன்று உடன் செல்லவில்லை.

நபில் இந்த ஆண்டு தொடக்­கப்­பள்ளி இறு­தி­யாண்­டுத் தேர்வு எழு­த­வி­ருக்கும் மாணவர்.

நாளை மறு­நாள் கேட்­டல் கருத்­த­றி­தல் தேர்­வும் இம்­மா­தம் 29ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை எழுத்­துத் தேர்வு­களும் இடம்­பெ­றும். அதற்­குள் சிறு­வ­னின் உடல்­நிலை தேறா­விட்­டால் தொடக்­கப்­பள்ளி இறு­தி­யாண்­டுத் தேர்வை அவன் எழுத முடி­யாது.

அதற்­குப் பதி­லாக சிறு­வ­னது முன்­னோட்­டத் தேர்வு முடி­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் அவ­னுக்கு மதிப்­பெண்­கள் வழங்­கப்­படும் என்று திரு­வாட்டி நோரா கூறி­னார். விபத்து குறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.