சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத் தலைவர் காலமானார்

சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத் தலைவர் காலமானார்

1 mins read
f5f74e95-5736-4391-b495-435f8643c088
கடந்த 2017ஆம் ஆண்டு தமிழ் முரசு ஏற்பாடு செய்த 12 வயதுக்கு உள்பட்ட சிறார்களுக்கான ஃபுட்சால் காற்பந்துப் போட்டியைக் காண வந்திருந்த திரு லிம் கியா தோங் பல சிறார்களுடனும் பெற்றோருடனும் அளவளாவினார். இப்போட்டி உட்லே பூங்காவில் உள்ள அரீனா அரங்கில் நடைபெற்றது. படம்: திமத்தி டேவிட் -
multi-img1 of 3
Google News Preferred Icon

சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் தலைவர் லிம் கியா தோங் இன்று(செப்டம்பர் 14) காலமானார். அவருக்கு வயது 70.

மாரடைப்பால் அவர் இறந்ததாக அறியப்படுகிறது. வழக்கறிஞரான திரு லிம் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு வரவில்லை. அப்போது அவர் அவருடைய அலுவலகத்தில் மயங்கிய நிலையில் காணப்பட்டார்.

திரு லிம் அவருடைய மனைவியையும் 31 வயது மகளையும் 30 வயது மகனையும் விட்டுச்செல்கிறார்.

சங்கத்தின் முதலாவது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான திரு. லிம், 2017ஆம் ஆண்டிலிருந்து அந்தப் பொறுப்பில் இருந்துவந்தார்.

தாம் நேசித்த காற்பந்து விளையாட்டுக்கு அவர் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியதாகச் சங்கம் குறிப்பிட்டது.

நாளை (15 செப்டம்பர்) முதல் ஜாலான் புசார் (Jalan Besar) விளையாட்டரங்கிலுள்ள சங்கத்தின் அலுவலக முகப்பில் அஞ்சலி செலுத்தும் வசதிகள் செய்யப்படும்.