இருவகைக் கிருமிகளை எதிர்க்கும் மொடர்னா COVID-19 தடுப்பூசிக்கு இடைக்கால அனுமதி

இருவகைக் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல்கொண்ட COVID-19 தடுப்பூசிகளுக்குச் சுகாதார அறிவியல் ஆணையம் இடைக்கால அனுமதி அளித்துள்ளது.

முதன் முதலில் தோன்றிய சார்ஸ்-சிஓவி-2(Sars-CoV-2 ), ஒமிக்ரான் பிஏ.1  ஆகிய இரு திரிபுகளையும் எதிர்க்கவல்ல மொடர்னா ஸ்பைக்வேக்ஸ் பைவேலண்ட் (Spikevax bivalent) கொவிட்-19 தடுப்பூசி,

அடிப்படை தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட 18 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களுக்கு வழங்கப்படும்.

தடுப்பூசிக்கான அதிகாரபூர்வப் பரிந்துரை விரைவில் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

ஒமிக்ரானின் BA.4 , BA.5 ஆகிய துணைரக திரிபுகள், ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, காமா ஆகிய திரிபுகளுக்கு எதிராகவும் தடுப்பூசி செயல்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் குறிப்பிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!