இரு திறன் 'பூஸ்டர்' தடுப்பூசிக்கு இடைக்கால அனுமதி

இரு திறன் 'பூஸ்டர்' தடுப்பூசிக்கு இடைக்கால அனுமதி

2 mins read
0aaf97b6-be30-4dbf-b459-fb6d8de79312
-

சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் மொடர்னா நிறு­வ­னம் உற்­பத்தி செய்­யும் இரு­ தி­றன் தடுப்­பூ­சிக்கு இடைக்­கால அனு­மதி வழங்­கி யுள்ளது. அந்த இரு­தி­றன் தடுப்­பூசி முதன்­மு­த­லில் தோன்­றிய சார்ஸ் சிஓவி-2, ஓமிக்­ரான் பிஏ.1 ஆகிய இரண்டு கிருமி வகை­க­ளுக்கு எதி­ரா­கத் தடுப்­பாற்­றல் கொடுக்­கும்.

ஸ்பைக்­வேக்ஸ் என்­பது அந்­தத் தடுப்­பூ­சி­யின் பெயர். முதல் இரண்டு தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்கொண்ட 18 வய­தி­ன­ரும் அதற்கு மேற்­பட்ட வய­தி­ன­ரும் அதை பூஸ்­டர் எனப்­படும் கூடு­தல் தடுப்­பூ­சி­யா­கப் போட்­டுக்கொள்­ள­லாம்.

புதிய தடுப்­பூசி சிங்­கப்­பூ­ரில் எப்­போது கிடைக்­கும் என்று சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் தெரி­விக்­க­வில்லை.

மொடர்னா நிறு­வ­னம், "அதன் முதல் இரு­தி­றன் தடுப்­பூ­சியை சிங்­கப்­பூ­ரில் உள்­ள­வர்­கள் செப்­டம்­பர் மாதம் பெறு­வ­தற்கு ஆணை­யத் து­ட­னும் அர­சாங்­கத்­து­ட­னும் இணைந்து பணி­யாற்றி வரு­வ­தாக," தனது அறிக்­கை­யில் கூறி­யது.

ஸ்பைக்­வேக்ஸ் தடுப்­பூ­சிக்­கான அதி­கா­ரத்­துவ பரிந்­து­ரையை சுகா­தார அமைச்­சும் கொவிட்-10 தடுப்­பூசி தொடர்­பி­லான நிபு­ணர் குழு­வும் உரிய நேரத்­தில் அறி­விக்­கும் என்று ஆணை­யம் நேற்று கூறியது.

தனது மருந்து ஆலோ­ச­னைக் குழு, தொற்­று­நோய் நிபு­ணர் குழு ஆகி­ய­வற்­று­டன் ஆலோ­சித்­த­பின்­னர் தடுப்­பூ­சிக்கு அனு­மதி வழங்­கி­ய­தாக சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் கூறி­யது.

மொடர்­னா­வின் முந்­திய தடுப்­பூசி முதன்­மு­த­லில் தோன்­றிய கொரோனா சிஓவி-2 வகைக் கிரு­மிக்கு எதி­ராக தடுப்­பாற்­றல் தந்­தது. இந்­தப் புது­வ­கைத் தடுப்­பூசி, அக்­கி­ருமி வகைக்கு எதி­ராக தொடர்ந்து தடுப்­பாற்­றல் அளிக்­கும் என்று ஆணை­யம் கூறி­யது.

அத்­து­டன் ஓமிக்­ரான் பிஏ.1 வகைக்கு எதி­ரா­க­வும் செயல்­படும்.

மேலும் ஓமிக்­ரான், பிஏ.4, பிஏ.5, ஆல்ஃபா, பேட்டா, டெல்டா, காமா ஆகிய கொவிட்-19 கிருமி வகை­ க­ளுக்கு எதி­ரான பிற­பொ­ருள் எதிரிகளை ஊக்­கு­விக்­கும் என்று முன்­னோட்ட தர­வு­கள் காட்­டு­வ­தாக ஆணை­யம் தெரி­வித்­தது.