பொதுமக்களின் நிதி அறிவுத் திறன் வளர தேசிய இயக்கம்

பொதுமக்களின் நிதி அறிவுத் திறன் வளர தேசிய இயக்கம்

2 mins read
b85518a3-be25-4f77-9a57-6d1d4141b4bf
-

தங்­கள் நிதி இருப்­பை­யும் ஓய்­வுக்­கா­லத்­தை­யும் திட்­ட­மி­டத் தேவை­யான அறி­வுத்­தி­ற­னை­யும் உறு­தி­யான நட­வ­டிக்­கை­க­ளை­யும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு வழங்க புதிய 'மணி­சென்ஸ்' இயக்­கம் தொடங்­கப்­பட்­டுள்­ளது.

இயக்­கம் வரும் நவம்­பர் மாத இறுதி வரை நடை­பெ­றும்.

மணி­சென்ஸ் மன்­றம் அந்த இயக்­கத்தை முன்­னெ­டுக்­கும். சிங்­கப்­பூர் நாணய ஆணைய­மும் மனி­த­வள அமைச்­சும் அதற்கு இணைந்து தலைமை வகிக்கும். மேலும் 12 அர­சாங்க அமைப்­பு­கள் அந்த இயக்­கத்­தில் கலந்­து­கொள்­ளும்.

சிங்கப்பூரர்கள் பலரும் நிதித் அறி­வுத்­தி­றனை எளி­தா­கப் பெற உதவும் நோக்கில் 'மணி­சென்ஸ்' எனும் தேசி­யக் கல்­வித்­திட்­டம் 2003ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்­டது.

இவ்­வாண்டு இயக்­கத்­தில் நேரடி­யா­க­வும் ஊட­கங்­க­ளி­லும் நிகழ்ச்சி­ கள் இடம்­பெ­றும். நிதித் திட்­ட­மி­ட­லுக்கு உதவி செய்­வ­தற்­காக கரு­வி­களும் சேவை­களும் முன்­வைக்­கப்­படும். வசந்­தம் தமிழ் ஒளி­வழி, சூரியா மலாய் ஒளி­ வ­ழி­ ஆகியவற்றில் குறு­நி­கழ்ச்­சி­களும் சேனல் 8, சிஎன்ஏ ஆகி­ய­வற்­றில் விளை­யாட்டு நிகழ்ச்சி, விளக்­கப்­ப­டம் போன்­றவையும் ஒளி­ப­ரப்­பப்­படும். நிதி இருப்­பைக் கையா­ள­வும் நிதி தொடர்­பான விவே­க­மான முடி­வு­களை எடுக்­க­வும் உத­வும் குறிப்­பு­கள் இந்த நிகழ்ச்­சி­களில் இடம்­பெ­றும்.

அத்­து­டன் கல்வி நிலை­யங்­கள், தொழில்­துறை ஆகி­ய­வற்­று­டன் சேர்ந்து மணி­சென்ஸ், இளை யர்­க­ளுக்­கா­க­வும் பொது­மக்­க­ளுக்­கா­க­வும் நேரடி நிகழ்ச்­சி­களை நடத்­தும். ஓய்­வுக்­கா­லத்­துக்­குத் திட்­ட­மி­டும் பயி­ல­ரங்­கு­கள், பொது­மக்­களுக்கு நிதி நலன் குறித்த தனிப்­பட்ட ஆலோ­சனை போன்­றவை வழங்­கப்­படும்.

ஓய்­வு­கா­லத்­துக்­குத் திட்­ட­மிட்டு உய­ரும் வாழ்க்­கைச் செல­வி­னத்­தைச் சமா­ளிக்க உத­வும் முழு­மை­யா­க­வும் படிப்­ப­டி­யா­க­வும் வழி­காட்­டும் பயி­ல­ரங்­கு­களை நிதி அறி­வுத்­தி­றன் நிலை­யம் பல இடங்­களில் நடத்­தும்.

மேலும், 'மணி­சென்ஸ்' அமைப்­பின் மேம்­ப­டுத்­தப்­பட்ட நிதி­ந­ல­னைக் கணக்­கி­டும் கருவி, அதன் மின்­னி­லக்க நிதித் திட்­ட­மி­டல் கருவி ஆகி­ய­வற்­றை­யும் பொது மக்கள் பயன்படுத்தலாம்.