நாளை முதல் தீமிதி திருவிழாவுக்கான பதிவு

நாளை முதல் தீமிதி திருவிழாவுக்கான பதிவு

3 mins read
99433a82-b55c-40bf-bef6-ff759909da27
கோப்புபடம்: த.கவி -

தீமி­தித் திரு­வி­ழா­வுக்­கும் அதற்கு முந்­தைய நேர்த்­திக்­க­டன்­க­ளான பால்­கு­டம், மாவி­ளக்கு, அங்­க­பி­ர­தட்­ச­ணம், கும்­பி­டு­தண்­டம், ஆகி­ய­வற்­றுக்­கும் இணை­யப் பதிவு நாளை 16ஆம் தேதி தொடங்­க­வி­ருக்­கிறது.

அடுத்த மாதம் 16ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று தீமி­தித் திரு­விழா நடை­பெ­ற­வி­ருக்­கிறது.

எந்த நேர்த்­திக்­க­ட­னுக்­கும் நேரடிப் பதிவு கிடை­யாது. அனைத்து பங்­கேற்­புப் பதி­வு­களும் இணை­யம் வழி­தான் செய்­யப்­பட வேண்­டும்.

பதிவை உறு­தி­செய்­யும் செய்தி அவர்­க­ளுக்கு குறுஞ்­செய்தி அல்­லது மின்­னஞ்­சல் மூலம் அனுப்பி வைக்­கப்­படும்.

கிரு­மிப் பர­வல் சூழ­லில் பெரிய அள­வி­லான நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்­வ­தன் தொடர்­பி­லான பாது­காப்­புக் கட்­டுப்­பா­டு­க­ளைக் கருத்­தில்­கொண்டு, இவ்­வாண்டு தீமிதி திரு­விழா நடை­பெ­றும்.

பக்­தர்­க­ளின் எண்­ணிக்­கைக்கு உச்ச வரம்பு எது­வு­மில்லை என்­றா­லும் பதிவு செய்து பங்­கு­பெ­று­வோர் குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யி­லேயே பங்­கு­பெற முடி­யும் என்று இந்து அறக்­கட்­டளை வாரி­யம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

நேர்த்­திக்­க­டன்­களில் பங்­கேற்­கும் பக்­தர்­கள் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருக்க வேண்­டும் என்று நினை­வூட்­டப்­ப­டு­கிறது.

மேலும், 16 வய­துக்­கும் 20 வய­துக்­கும் இடைப்­பட்ட தீமி­திக்­கும் பக்­தர்­கள், அக்­டோ­பர் 10ஆம் தேதிக்கு முன், தங்­கள் அடை­ யாளத்தை உறு­தி­செய்ய, பெற்­றோ­ரு­டன் ஸ்ரீ மாரி­யம்­மன் கோயி­லுக்­குச் சென்று பதிவு செய்­து­கொள்ள வேண்­டும். இரவு 7 மணி முதல் 9 மணி வரை இந்­தச் சேவை செயல்­படும்.

அக்­டோ­பர் 16ஆம் தேதி அன்று மாலை 5.00 மணி, மாலை 6.00 மணி, இரவு 7.00 மணி ஆகிய நேர அட்­ட­வ­ணைக்­குப் பதிவு செய்துகொண்ட ஆண் பக்­தர்­கள், தங்­கள் கங்­க­ணத்­தைப் பெற்­றுக்­கொள்ள ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் கோயில் பிஜிபி திரு­மண மண்­ட­பத்­தின் தரைத் தளத்­துக்­குச் செல்ல வேண்­டும்.

இரவு 9.30 மணி, 10.30 மணி, 11.30 மணி ஆகிய நேர அட்­ட­வணைக்­குப் பதிவு செய்­து­கொண்ட ஆண் பக்­தர்­கள், தங்­கள் கங்­க­ணத்­தைப் பெற்­றுக்­கொள்ள ஸ்ரீ மாரி­யம்­மன் கோயி­லுக்­குப் பக்­கத்­தில் உள்ள பகோடா ஸ்தி­ரீட்­டுக்­குச் செல்ல வேண்­டும்.

மாலை 5.00 மணி, மாலை 6.00 மணி, இரவு 7.00 மணி ஆகிய நேர அட்­ட­வ­ணைக்­குப் பதிவு செய்துகொண்ட ஆண் பக்­தர்­கள், தங்­கள் பாத ஊர்­வ­லத்தை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெரு­மாள் கோயி­லி­லி­ருந்து தொடங்­கு­வர்.

இரவு 9.30 மணி, 10.30 மணி, 11.30 மணி ஆகிய நேர அட்­ட­ வணைக்­குப் பதிவு செய்­து­கொண்ட ஆண் பக்­தர்­கள் தங்­கள் கங்­க­ணத்­தைப் பெற்­றுக்­கொண்­ட­வு­டன் ஸ்ரீ மாரி­யம்­மன் கோயி­லுக்கு வெளியே காத்­தி­ருந்து பின்­னர் தீமி­திக்க கோயி­லுக்­குள் செல்­ல­லாம்.

கொவிட்-19 தொடர்­பான பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளைக் கருத்­தில்கொண்டு ஒரே இடத்­தில் அதி­க­மா­னோர் கூடு­வ­தைத் தவிர்க்­கும் பொருட்டு, இந்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

ஒரு குறிப்­பிட்ட நேர அட்­ட­வ­ணைக்­குப் பதிவு செய்­து­கொண்ட பக்­தர்­கள் மற்­றொரு நேர அட்­ட­ வ­ணைக்கு மாற்­றிக்­கொள்ள அனு­ ம­திக்­கப்­பட மாட்­டார்­கள். முத­லில் வரு­வோ­ருக்கு முதற்­ச­லுகை எனும் அடிப்­ப­டை­யில் பதிவு நடை­பெ­றும்.

அதே­போல் ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் கோயி­லில் கங்­க­ணத்­தைப் பெற்­றுக்­கொள்ள பதிவு செய்­து­கொண்­டோர், அதை ஸ்ரீ மாரி­யம்­மன் கோயி­லில் பெற்­றுக்­கொள்ள அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்­கள்.

பக்­தர்­கள் அனை­வ­ரும் அவர்­க­ளின் நேர்த்­திக்­க­டன்­கள் தொடங்­கு­வ­தற்கு 30 நிமி­டத்­திற்கு முன்­ன­தா­கவே ஆல­யத்­தில் இருக்க வேண்­டும்.

தாங்­கள் பதி­வு­செய்து கொண்­டுள்ள நேர அட்­ட­வணை யைத் தாண்டி மற்­றொரு நேர அட்­ட­வ­ணை­யில் தங்­கள் நேர்த்­திக்­க­டன்­ க­ளைச் செலுத்த பக்­தர்­கள் அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்­கள்.

பக்­தர்­கள் தீமி­தித் திரு­வி­ழா­வில் கலந்­து­கொள்ள https://heb.org.sg/fw2022 இணை­யத் தளத்­தில் பதிவு செய்ய வேண்­டும்.

அக்­டோ­பர் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை­யி­லான தீமி­தித் திரு­விழா தொடர்­பான நிகழ்ச்­சி­க­ளின் நேர­லை­யைக் காண, இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் யூடி­யூப், ஃபேஸ்புக் தளத்தை நாட­லாம்.

தீமி­தித் திரு­விழா தொடர்­பான மேல் விவ­ரங்­க­ளுக்கு 6223 4064 எனும் எண்­ணில் ஸ்ரீ மாரி­யம்­மன் கோயி­லைத் தொடர்­பு­கொள்­ள­லாம்.