விமானத்தில் இடமில்லை; நாடு திரும்ப முடியவில்லை

விமானத்தில் இடமில்லை; நாடு திரும்ப முடியவில்லை

1 mins read
3493d211-98b9-4c8e-9c81-aef523b7f130
-

தோழி­யின் திரு­ம­ணத்­துக்­காக கிரீஸ் சென்­று­விட்டு, இஸ்­தான்­புல் வழி­யாக சிங்­கப்­பூர் திரும்ப முயன்ற ஆடை வடி­வ­மைப்­பா­ள­ருக்கு அதிர்ச்சி.

செப்­டம்­பர் 11ஆம் தேதி இரவு திரு­வாட்டி குவே­யும் அவ­ரது குடும்­பத்­தா­ரும் நாடு திரும்ப இருந்­த­னர்.

பய­ணத்­துக்கு மூன்று மணி நேரம் இருந்­த­போது, மித­மிஞ்­சிய முன்­ப­தி­வு­க­ளால் விமா­னத்­தில் இடம் இல்லை என்று அவர்­க­ளி­டம் கூறப்­பட்­டது. அவர்­கள் காத்­தி­ருப்­புப் பட்­டி­ய­லில் வைக்­கப்­பட்­டனர்.

பின்­னர், அவர்­கள் ஓர் இரவு துருக்­கி­யில் இருக்­கும்­படி ஆனது. மொத்­தம் 14 பேர் அச்­சம்­ப­வத்­தில் பாதிக்­கப்­பட்­ட­னர்.

விமான நிறு­வ­னம் ஹோட்­டல் செல­வுக்­கான பணத்தை ஏற்­றுக்­கொண்டதுடன், இல­வ­ச­மாக பயண தேதியை மாற்­றிக் கொடுத்தது. 600 யூரோ ($842) இழப்­பீடு தரவும் நிறு­வ­னம் முன்­வந்­த­தாக திரு வாட்டி குவே கூறி­னார்.

ஆனால் தமது இளம் மகனை சிங்­கப்­பூ­ரி­லேயே விட்டு வந்த அவர், பிள்­ளை­யைப் பார்க்க வீடு திரும்ப விரும்­பி­ய­தா­கக் கூறி­னார்.

மேலும் தாங்கள் ஒப்படைத்த பயணப்பெட்டிகளை மீண்டும் பெற ஒரு மணி நேரம் காத்திருக்கும்படி திருவாட்டி குவேயிடம் கூறப்பட்டது.

ஹோட்­ட­லுக்­குச் செல்லவும் ஒரு மணி நேரம் எடுத்­தது என்­றும் அவர் குறிப்பிட்டார்.