ஒன்பது நாட்களுக்கு மேலாக, நான்கு பேர் சிறப்புத் தேவையுடைய 19 வயது இளைஞரை ஹோட்டல் அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளது. அவரை அடித்து, சிறுநீர் குடிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர் துன்புறுத்தப்படுவதை இணைய பதிவில் பார்த்த அவரது சகோதரி காவல்துறைக்கு எச்சரிக்கை செய்த பின்னரே அவர் கண்டுபிடிக்கப்பட்டார். பென்டமியரில் உள்ள ஆர்டன் பூட்டிக் ஹோட்டலில் அந்த இளையரை ஆபத்தான நிலையில் காவல்துறையினர் கண்டனர். கீறல் காயங்கள், ரசாயனம், சிகரெட் துண்டால் ஏற்படுத்தப்பட்ட தீக்காயங்கள், எலும்பு முறிவுகள், தலையில் காயங்களுடன் அவர் காணப்பட்டார். குழு உறுப்பினர்களில் ஒருவரான 20 வயது புத்ரி நுராமிரா ஆயிஷா ரோஸ்லிக்கு குறைந்தபட்சம் 12 மாத சீர்திருத்தப் பயிற்சிக்கு தண்டனை நேற்று விதிக்கப்பட்டது.
சிறப்புத் தேவை உடைய இளையரை துன்புறுத்திய பெண்ணுக்கு தண்டனை
1 mins read
-

