'பியுபி'க்கு 4 விருதுகள்

'பியுபி'க்கு 4 விருதுகள்

1 mins read
4f15f499-0077-4957-87e7-f1426a06c39f
-

கடல்நீரை நன்னீராக்கும் கெப்பல் மரினா ஈஸ்ட் ஆலை மேலும் ஓர் அனைத்துலக விருதை வென்றுள்ளது.

அனைத்துலக தண்ணீர் சங்கத்தின் புத்தாக்க விருதுத் திட்டத்தின், டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நேற்று முன்தினம் நடந்த அனைத்துலக மாநாடு கண்காட்சியில் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் (பியுபி) திட்டங்கள் நான்கு விருதுகளை வென்றன.

நன்னீர், கடல்நீர் இரண்டை யும் சுத்திகரிக்கக்கூடிய கெப்பல் ஆலை, தண்ணீர்த் துறையில் தலைசிறந்த புத்தாக்கத்திற்கு வழங்கப்படும் மாபெரும் புத்தாக்க விருதையும், தனிச் சிறப்பான திட்ட செயலாக்கம், விநியோக பிரிவில் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளது.

பியுபியின் மற்ற இரண்டு திட்டங்களான சுவா சூ காங் வாட்டர்வொர்க்ஸ் மேம்பாடு, சாங்கி நீர் மீட்பு திட்ட மின்னிலக்க இரட்டைத் திட்டம் ஆகியவை முறையே சந்தையை மாற்றும் நீர் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு, செயல் திறன் மேம்பாடு மற்றும் செயல் பாட்டு தீர்வுகள் பிரிவுகளில் தங்க விருதை வென்றன.