காரில் போதைப்பொருள் உட்கொண்டதற்காக பிடிபட்ட வாஸ்வானி ரிச்சர்ட் பிரகாஷ், 36, காவல்துறையினர் அவரது வாகனத்தை சோதனை செய்ய முயன்றபோது காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளார். தோ பாயோ வரை காவல்துறையினர் அவரை துரத்திச் சென்றனர். அப்போது, சாலையைக் கடந்துகொண்டிருந்த ஒரு பாதசாரி மீது மோதினார். அப்போதும் நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்று மற்றொரு வாகனத்தில் மோதினார்.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், கடுமையான காயத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை நேற்று பிரகாஷ் ஒப்புக்கொண்டார்.
போதைப்பொருள் பயன்பாடு, ஏனைய போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பான குற்றங்களையும் ஒப்புக்கொண்ட பிரகாஷ், முந்தைய குற்றங்களில் பிணையில் வெளியில் இருந்தபோது குற்றங்களைச் செய்துள்ளார். அவ்வழக்குகள் இன்னும் விசாரணையில் உள்ளன.
பிரகாஷின் வழக்கறிஞர் தண்டனைக் குறைப்பு மனுவை இறுதி செய்ய, நீதிபதி வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

