உள்ளூர் ஊழியர்களை மேம்படுத்த $400 மில்லியன் நிதியுதவி

உள்ளூர் ஊழியர்களை மேம்படுத்த $400 மில்லியன் நிதியுதவி

2 mins read
f6d8e689-b760-429b-afb9-a2c9feb9e8ca
உள்ளூர் நிதி ஊழியர்களை மட்டுமே வைத்துக்கொண்டு வட்டார, உலகளாவிய நிதி மையத்தை உருவாக்க முடியாது என்றும் மிகச் சிறந்த வெளிநாட்டுத் திறனாளர்களை சிங்கப்பூர் தொடர்ந்து ஈர்க்க வேண்டும் என்றும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நிதிச் சேவை­யில் உள்­ளூர் ஊழி­யர்­களை மேம்­ப­டுத்த $400 மில்­லி­யன் நிதியுதவி வழங்­கப்­படும் என்று துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங் அறி­வித்­துள்­ளார்.

நிதிச் சேவைத் துறை உரு­மாற்­றுத் திட்­டம் 2025ன் அறி­முக நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு பேசிய திரு வோங், உல­க­ளா­விய நிதி மைய­மாக சிங்­கப்­பூ­ரின் நிலையை தக்கவைத்துக்கொள்ள வேண்­டும் என்று கூறி­னார்.

அதற்கு ஏது­வாக எதிர்­கா­லத்­துக்­குத் தயா­ராக இருக்­கும் ஊழி­ய­ர­ணியை உரு­வாக்க வேண்­டும் என்­றார் அவர்.

"ஆசி­யா­வில் முன்­னிலை வகிக்­கும் அனைத்­து­லக நிதி மையாக இருக்க, மிகச் சிறந்த உள்­ளூர் மற்­றும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தேவை," என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யக் கட்­ட­டத்­தில் நடை­பெற்ற அறி­முக நிகழ்ச்­சி­யின்­போது திரு வோங் தெரி­வித்­தார்.

திரு வோங், சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் துணைத் தலை­வ­ரா­க­வும் பதவி வகிக்­கி­றார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

புதுப்­பிக்­கப்­பட்ட உரு­மாற்­றுத் திட்­டம், இதற்கு முன்பு அறி­மு­கப்­

ப­டுத்­தப்­பட்ட திட்­டத்­து­டன் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும். புதிய திட்­டத்­துக்கு ஆத­ர­வாக ஐந்து தூண்­கள் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

நிதி ஆற்­றல் வலி­மையை மேம்

­ப­டுத்­து­வது, நிதி உள்­கட்­ட­மைப்பை மின்­னி­லக்­கப்­ப­டுத்­து­வது, ஆசி­யா­வில் கரிம வெளிப்­பாடு அறவே இல்­லாத நிலையை விரை­வுப்­ப­டுத்­து­தல், நிதிக் கட்­ட­மைப்­பு­க­ளின் எதிர்­கா­லத்தை வடி­வ­மைத்­தல், திறன்­மிக்க மற்­றும் ஏற்­பு­டைய ஊழி­ய­ர­ணியை உரு­வாக்­கு­வது ஆகி­யவை அந்த ஐந்து தூண்­க­ளா­கும்.

திறன் உத்திமுறை இரு முனை அணுகுமுறையைக் கொண்டது என்று திரு வோங் தெரிவித்தார்.

"உள்ளூர் நிதி ஊழியர்களை மட்டுமே வைத்துக்கொண்டு வட்டார, உலகளாவிய நிதி மையத்தை உருவாக்க முடியாது என்பது எங்களுக்குத் தெரியும்.

"எனவே, வெளிநாடுகளிலிருந்து மிகச் சிறந்த திறனாளர்களை சிங்கப்பூர் தொடர்ந்து ஈர்க்க வேண்டும்," என்று துணைப் பிரதமர் வோங் வலியுறுத்தினார்.