நீச்சல் வீரர்கள் ஜோசஃப் ஸ்கூலிங், அமேண்டா லிம்மின் பரிசுத் தொகையைப் பிடித்துகொள்ள எடுக்கப்பட்ட முடிவுடன் தனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஸ்கூலிங்கும் லிம்மும் கஞ்சா உட்கொண்டதை ஒப்புக்கொண்ட பிறகு அவர்களுக்கு வழங்கப்பட இருந்த பரிசுத் தொகை பிடித்துக்கொள்ளப்படும் என்று சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் நேற்று முன்தினம் கூறியதை அடுத்து அமைச்சு இவ்வாறு நேற்று தெரிவித்தது.
ஸ்கூலிங்கிற்கும் லிம்முக்கும் பரிசுத் தொகை வழங்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று மன்றம்
கூறியது.

