ஈசூனில் உள்ள சாஃப்ரா சாகச விளையாட்டு நிலையத்தில் கடந்த ஆண்டு உயரத்திலிருந்து மாணவர் ஒருவர் விழுந்ததற்குக் காரணமாக இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 22 வயது வெளிப்புற நடவடிக்கைகள் பயிற்சி அதிகாரி முகமது நுருல் ஹக்கிம் முகமது டின் மீது நேற்று குற்றம் சாட்டப்பட்டது.
அங்குள்ள 'கெனோப்பி ஸ்கை வாக் ரோப்' பயிற்சித் தளத்தில் வேலை செய்த ஹக்கிம், 15 வயது மாணவரான ஜெத்ரோ புவா சின் யாங்கின் பாதுகாப்பு இடைவார் சரியாகப் பொருத்தப்பட்டிருக்கிறதா என்று உறுதிசெய்ய தவறி விட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி பிற்பகல் 1.25 மணிக்கு நிகழ்ந்தது.
ஆங்கிலோ-சீன தன்னாட்சிப் பள்ளியைச் சேர்ந்த அம்மாணவர், பாதுகாப்பு இடைவார் அவிழவே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார் என்றும் அதனால் அவரது தொண்டைப் பகுதியில் வார் அழுத்தம் கொடுத்ததால் அவர் மூச்சுவிட சிரமப்பட்டார் என்றும் பல உடல் அங்கங்கள் செயல்இழந்த காரணத்தால் அவர் உயிர் பிரிந்தது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஹக்கிமுக்கு $10,000 பிணை அளிக்கப்பட்டுள்ளது.

