சிங்கப்பூரில் மொத்தம் 19 குரங்கம்மை தொற்று சம்பவங்கள்

சிங்கப்பூரில் மொத்தம் 19 குரங்கம்மை தொற்று சம்பவங்கள்

1 mins read
0b377418-84ae-4522-806d-8b5f2ff8e22d
படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

சிங்கப்பூரில் புதிதாக மேலும் மூவருக்கு குரங்கம்மை தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவற்றையும் சேர்த்து சிங்கப்பூரில் மொத்தம் 19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார அமைச்சு வாரந்தோறும் அதன் இணையத்தளத்தில் வெளியிடும் குரங்கம்மை தொற்று சம்பவங்கள் அறிக்கையில் இந்த ஆக அண்மைய சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. செப்டம்பர் 4லிருந்து செப்டம்பர் 10க்கு இடைப்பட்ட வாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

சிங்கப்பூரில் ஆக அண்மைய தொற்று சம்பவம் ஆகஸ்ட் 14 அன்று தொடங்கிய வாரத்தில் பதிவுசெய்யப்பட்டது.

அனைத்­து­லக சுகா­தார நெருக்­க­டி­யாக குரங்­கம்­மைத் தொற்றை உலக சுகா­தார நிறு­வனம் ஜூலை 23 அன்று அறி­வித்­தது.