அலட்சியத்தால் புக்கிட் பாத்தோக் தீச்சம்பவத்தில் ஏற்பட்ட மரணம்: தொழில்நுட்பருக்கு அபராதம்

அலட்சியத்தால் புக்கிட் பாத்தோக் தீச்சம்பவத்தில் ஏற்பட்ட மரணம்: தொழில்நுட்பருக்கு அபராதம்

1 mins read
b634ed48-2786-4dee-9804-c98cf8a146ee
மலையப்பன் மாயழகு, 51 -
multi-img1 of 2

புக்கிட் பாத்தோக் புளோக் ஒன்றில் உள்ள ஒரு வீட்டில் தீ மூண்டபோது அந்த வீட்டுக்கு அருகே இருக்கும் அவசரகால தண்ணீர்க் குழாய் உடனடியாக தண்ணீர் வரக்கூடிய நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த தொழில்நுட்பர் ஒருவர் தவறிவிட்டார்.

இப்படி அவர் அலட்சியமாக இருந்ததால் மலையப்பன் மாயழகு, 51தின்போது மீட்புப் பணிகள் தாமத மடைந்தன.

தண்ணீர்க்குழாயில் உடனடியாக தண்ணீர் வராமல் இருந்ததே அதற்கான காரணம். தீயணைப்பாளர்கள் தங்கள் வண்டிகளில் இருந்த தண்ணீரைப் பயன்படுத்தி தீயை அணைக்க வேண்டியதாயிற்று.

அந்தத் தீ விபத்தில் சிக்கி ஒருவர் மாண்டுவிட்டார். இரண்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.

புலன்விசாரணை நடந்தபோது மலையப்பன் மாயழகு, 51, என்ற அந்தத் தொழில்நுட்பர், பிறர் அறியா வகையில் தண்ணீர் இயந்திர சாதன அறைக்குள் சென்று தனது தவறை மறைக்கும் வகையில், தண்ணீர்க் குழாய் தானாக செயல்படும் நிலைக்கு அதை மாற்றிவிட்டார்.

இந்தியாவைச் சேர்ந்த மலையப்பன், இன்று (செப்டம்பர் 16) குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு $2,700 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் விரிவான செய்தியை நாளைய (செப்டம்பர் 17) தமிழ் முரசு அச்சுப் பிரதியில் படிக்கலாம்.