ஹெங்: நாடுகள் ஒத்துழைக்க கூடுதல் தளங்கள் தேவை

ஹெங்: நாடுகள் ஒத்துழைக்க கூடுதல் தளங்கள் தேவை

2 mins read
5bc2601b-ea25-4f28-929e-c035d3242089
-

நாடு­கள் பல­த­ரப்­பட்ட சவால் ­களைச் சமா­ளிக்க வேண்­டி­யுள்ள நிலை­யில் ஒத்­து­ழைப்­புக்­கான கூடு­தல் தளங்­களை அமைக்க வேண்­டும் என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் கூறி­யுள்­ளார்.

இந்தத் தளங்­கள் நாடு­களுக்கு இடையே ஆக்­க­க­ர­மான உற­வை­யும் மேலும் வலு­வான ஒத்­துழைப் பையும் உரு­வாக்க நட­வ­டிக்கை எடுக்­க­லாம் என்று அவர் நேற்று தெரி­வித்­தார்.

சீனா-ஆசி­யான் எக்ஸ்போ சந்தை அத்­த­கைய தளங்­களில் ஒன்று எனப் பொரு­ளி­யல் ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான திரு ஹெங் கூறி­னார்.

சீனா­வுக்­கும் ஆசி­யா­னுக்­கும் இடை­யி­லான பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பை ஊக்­கு­விப்­பது அந்த நிகழ்ச்­சி­யின் நோக்­கம்.

திரு ஹெங் 19வது சீனா-ஆசி­யான் எக்ஸ்போ நிகழ்ச்­சி­யின் தொடக்­க­வி­ழா­வில் மெய்­நி­கர் வழி­யாக உரை­யாற்­றி­னார்.

அந்த நான்கு நாள் நிகழ்ச்சி, சீனா­வில் குவாங்சி மாநி­லத்­தில் உள்ள நானிங் நக­ரில் நடை­பெற்று வரு­கிறது.

1,000க்கும் அதி­க­மான நிறு­வ­னங்­கள் அதில் பங்­கேற்று வரு­கின்­றன.

நேற்­றைய தொடக்­க­வி­ழா­வில் சீனா­வின் துணைப் பிர­த­மர் ஹான் ஸெங் கலந்­து­கொண்­டார்.

ஆசி­யான் தலை­வர்­களும் சீன அதி­பர் ஸி ஜின்­பிங்­கும் கடந்த ஆண்டு முழு­மை­யான உத்­தி­பூர்வ பங்­­கா­ளித்­து­வத்தை அமைக்க உறுதி அளித்­ததை திரு ஹெங் சுட்­டி­னார்.

ஆசி­யா­னுக்­கும் சீனா வுக்­கும் இடை­யி­லான கலந்­து­ற­வா­ட­லின் 30 ஆண்டு நிறை­வைக் குறிக்­கும் இரு­த­ரப்பு சிறப்பு மாநாட்­டில் அந்த இணக்­கம் காணப்­பட்­டது.

அந்­தப் பங்­கா­ளித்­து­வம், எல்லா துறை­க­ளி­லும் ஆசி­யான் சீனா ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்தி, திறந்த அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய, நீடித்த நிலைத்­தன்மை மிக்க வட்­டா­ரத்தை அமைக்க உத­வும் என்று துணைப் பிரதமர் கூறினார்.