நல்லாசிரியர் விருது 2022: வாழ்நாள் சாதனையாளர்களின் அர்ப்பணிப்புக்காக அங்கீகாரம் தமிழ்மொழி, அடையாளத்தை முன்னிறுத்திய மூத்த ஆசான்கள்

நல்லாசிரியர் விருது 2022: வாழ்நாள் சாதனையாளர்களின் அர்ப்பணிப்புக்காக அங்கீகாரம் தமிழ்மொழி, அடையாளத்தை முன்னிறுத்திய மூத்த ஆசான்கள்

3 mins read
ca3e04b8-2af1-48c0-a24b-7290b51e9530
திரு பொன்னழகு மாணிக்கம(இடது), திரு எஸ். சாமிக்கண்ணு படங்கள்: திமத்தி டேவிட் -
multi-img1 of 3

நல்­லா­சி­ரி­யர் வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விரு­தினை இவ்­வாண்டு மூத்த தமி­ழா­சி­ரி­யர்­க­ளான திரு சாமி­கண்ணு சிதம்­ப­ரம், திரு பொன்­ன­ழகு மாணிக்­கம் இரு­வ­ரும் பெறு­கின்­ற­னர். உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலை­யத்­தில் இன்று(செப்டம்பர் 17) நடை­பெ­றும் நல்­லா­சி­ரி­யர் விருது நிகழ்ச்சி­யில் இரு­வ­ரும் விரு­த­ளித்­துச் சிறப்­பிக்­கப்­ப­டு­வர்.

தமிழ் முரசு நாளி­தழ், சிங்­கப்­பூர்த் தமி­ழாசி­ரி­யர் சங்­கம், தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு ஆகி­யவை இணைந்து நல்­லா­சி­ரி­யர் விருது விழாவை 2002ஆம் ஆண்டு தொடங்கி ஆண்­டு­தோ­றும் வழங்கி வரு­கின்றன.

சிங்­கப்­பூ­ரில் முன்­மா­தி­ரி­யா­கத் திக­ழும் தமி­ழா­சி­ரி­யர்­க­ளைக் கௌர­விக்­கும் வண்­ணம் வழங்­கப்­படும் வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விரு­தைப் பெறு­ப­வர்­க­ளில் ஒரு­வ­ரான 74 வய­து­டைய திரு சாமிக்­கண்ணு சிதம்­ப­ரம் ஒரு மூத்த தமி­ழா­சி­ரி­யர்.

தலை­வ­ரா­க­வும் உறுப்­பி­ன­ரா­க­வும் சிங்­கப்­பூர்த் தமி­ழா­சி­ரி­யர் சங்­கத்­தில் 55 ஆண்­டு­கள் சேவையாற்றி வரு­ப­வர்.

அரை நூற்­றாண்­டுக்­கும் மேலாக ஆசி­ரி­யர் துறை­யில் பணி­பு­ரிந்­து­ வ­ரும் இவர் ஏறத்­தாழ 26 ஆண்­டு கள் உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலை­யத்­தில் பணி­பு­ரிந்­துள்­ளார்.

இவர் சங்­கத்­தின் செய­லா­ள­ராக இருந்­த­போது, மாண­வர்­கள் மத்­தி­யில் தமிழ்­மொ­ழி­யின் பேச்சு புழக்­கம் குறைந்து வரு­வதை உணர்ந்து தமி­ழா­சி­ரி­யர் சங்­கம் 1990களில் 'தமி­ழில் பேசு­வோம்' இயக்­கத்­தைத் தொடங்­கி­யது.

தற்­போது பெரி­ய­ள­வில் கொண்­டா­டப்­படும் தமிழ்­மொழி விழா­விற்கு இந்த இயக்­கம் முன்­னோட்­ட­மாக இருந்­தது.

தமி­ழர் அடை­யா­ளத்தை இளை­யர்­க­ளி­டம் முன்­னி­றுத்த தமி­ழா­சி­ரி­யர்­க­ளின் பங்கு முக்­கி­ய­மா­னது என்­கி­றார், தமிழ் சமூ­கத்தை முன்­னேற்­று­வ­தில் தீவிர நாட்­டம் உள்­ள­திரு சாமிக்­கண்ணு.

தமி­ழா­சி­ரி­யர் சங்­கத்­தின் தலை­ வ­ராக இருந்த 20 ஆண்டு காலத்­தில் தமிழ் கல்வி, ஆசி­ரி­யர் பணி சார்ந்த பல்­வேறு முயற்­சி­கள் திரு சாமிக்கண்ணு மேற்கொண்டார்.

சிங்­கப்­பூ­ரில் தமிழ்மொழி­யில் பட்­டக்­கல்வி அமைப்­ப­தற்கு இவ­ரது தலை­மைத்­து­வத்­தின்கீழ் சங்­கம் விடாது செயல்­பட்­டது.

ஐந்து ஆண்டுகால முயற்­சி­யின் பல­னாய் சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் 2005ஆம் ஆண்டு தமிழ்­மொ­ழி­யில் பட்­டக்­கல்வி தொடங்­கப்­பட்­டது.

ஆசி­ரி­யர்­க­ளின் அரும்­ப­ணி­களை அங்­கீ­க­ரிக்­கும் வண்­ணம் வழங்­கப்­பட்­டு­வ­ரும் நல்­லா­சி­ரி­யர் விரு­துக்கு தமிழ் முர­சு­டன் சேர்ந்து திரு சாமிக்­கண்­ணு­வின் தலை­மைத்­து­வத்­தின்­கீழ் தமி­ழா­சி­ரி­யர் சங்­கம் அடித்­த­ள­மிட்­டது.

மேலும், இவ­ரது தலை­மைத்­து­வத்­தின்­கீழ் தமி­ழா­சி­ரி­யர்­க­ளின் முன்­னேற்­றத்­திற்கு வாய்ப்­ப­ளிக்­கும் வகை­யில் கல்வி அமைச்­சில் தமி­ழா­சி­ரி­யர்­கள் இயக்­கு­நர் பொறுப்பை ஏற்க சங்­கம் வழி­ய­மைத்­தது.

உல­கத் தமி­ழா­சி­ரி­யர் பேர­வை­யில் 10 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக தலை­வ­ரா­கச் செயல்­பட்டு வரும் திரு சாமிக்­கண்ணு, உல­கத் தமி­ழா­சி­ரி­யர் மாநாட்­டுக்கு பெரும் பங்­காற்றி வரு­கி­றார்.

நம்பிக்கை ஊட்டும் ஆசிரியர்

கற்­றல் கற்­பித்­த­லில் மதிப்­பீடு என்­பது முக்­கி­ய­மான கூறா­கும்.

வகுப்­பில் ஆசி­ரி­யர் கற்­பிப்­ப­தில் கவ­னம் செலுத்­தி­னால் தேர்வு­ களும் மதிப்­பீ­டு­களும் சுல­பமே என்ற நம்­பிக்­கையை மாண­வர்­களி­டம் உரு­வாக்­க­வேண்­டும் என்­பதே வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விருது பெரும் மற்­றொரு மூத்த தமி­ழா­சி­ரி­ய­ரான 73 வயது திரு பொன்­ன­ழகு மாணிக்­கத்­தின் இலக்கு.

தமி­ழா­சி­ரி­யர் பணி­யில் 54 ஆண்டு கால­மாக ஈடு­பட்­டுள்ள இவர், பயிற்சி ஆசி­ரி­ய­ராக இருந்த காலத்­தி­லேயே ஏறத்­தாழ 260 மாண­வர்களுக்கு தனி ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றி­ய­வர்.

பதின்ம வய­தி­லேயே ஆசி­ரி­யர் பணி­யைத் தொடங்­கிய இவர், ஏறத்­தாழ 24 ஆண்­டு­கள் உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலை­யத்­தில் தமி­ழா­சி­ரி­ய­ரா­க­வும் துறைத் தலை­வ­ரா­க­வும் பணி­பு­ரிந்­தி­ருக்­கி­றார்.

தம் பணிக் காலத்­தில் மாண­வர்­க­ளின் சிறந்த கட்­டு­ரை­க­ளைத் தொகுத்து வருங்­கால தலை முறைக்கு உத­வும் வகை­யில் வழி­காட்­டிக் கையேடு என்­னும் கையேட்­டினை உரு­வாக்­கும் முயற்­சி­யில் குழு­வு­டன் ஈடு­பட்­டார்.

தம்­மு­டைய வகுப்­பிற்கு மாண­வர்­கள் மகிழ்ச்­சி­யு­ட­னும் விருப்­பத்­து­ட­னும் ஆர்­வத்­து­ட­னும் வரு­வதை தமது வெற்­றி­யாகக் கருதும் இவர், 12 ஆண்­டு­கள் தொடக்­கப்­பள்ளி ஆசி­ரி­ய­ரா­க­வும் 42 ஆண்­டு­கள் உயர்­நி­லைப்­பள்ளி ஆசி­ரி­ய­ரா­க­வும் பணி­பு­ரிந்­துள்­ளார்.

"டிரஃபால்­கர் தொடக்­கப்­பள்­ளி­யில் நான் ஆசி­ரி­ய­ராக பணி­புரிந்­த­போது அந்த வட்­டா­ரத்­தி­லுள்ள பல மாண­வர்­கள் ஏழ்­மை­யான பின்­னணி­யி­லி­ருந்து வந்­த­வர்­கள்.

"அவர்­க­ளுக்கு கல்­வி­யின் அவ­சி­யத்­தை­யும் தமிழ்­மொ­ழி­யின் முக்­கி­யத்­து­வத்­தை­யும் எடுத்­து­ரைத்து அவர்­கள் சிறந்த மாண­வர்­க­ளாக உரு­வெ­டுக்க துணை நின்­றது இன்­ற­ள­வும் மன­நி­றை­வை­ய­ளிக்­கிறது," என்றார் திரு பொன்னழகு.