இன்று பிற்பகல் 2 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறும் நல்லாசிரியர் விருது விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருதுடன், தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி/புகுமுக கல்வி நிலையம் ஆகிய பிரிவுகளில் ஆறு பேர் இந்த ஆண்டின் நல்லாசிரியர் விருது களைப் பெறுகின்றனர்.
மேலும் சிறந்த பயிற்சி ஆசிரியர் விருதும் வழங்கப்படும்.
இந்நிகழ்வில் தொடர்பு, தகவல் மற்றும் சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இருக்கிறார்.
இந்நிகழ்ச்சியை நேரலையில் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் (TLLPC) யூடியூப் தளத்திலும் 'ஃபேஸ்புக்' பக்கத்திலும் காணலாம்.

