20% ‘செர்ஸ்’ குடும்பங்கள் புது வீட்டுக்கு விண்ணப்பம்

வீடு கேட்ட 10ல் 9 அங் மோ கியோ குடும்பங்களுக்கு வீடு நிச்சயம் என்றது கழகம்

செர்ஸ் எனப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒட்டுமொத்த மறுமேம்பாட்டுத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள அங் மோ கியோ குடும்பங்களில் ஏறக்குறைய 20% குடும்பங்கள், மே, ஆகஸ்ட் மாத விற்பனைகளில் இடம்பெற்றிருந்த புதிய வீடுகளுக்கு மனுச் செய்து இருக்கின்றன.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நேற்று இதனை தெரிவித்தது. வீடு வாங்க விண்ணப்பிக்கும் 10 பேரில் கிட்டத்தட்ட ஒன்பது பேருக்கு வீடு கிடைத்துவிடும் என்றும் கழகம் தெரிவித்தது.

முன்னுரிமை ஒதுக்கீட்டு அளவு இருப்பதால் அவர்களுக்கு வீடு கிடைப்பது உறுதி என்று அது குறிப்பிட்டது.

செர்ஸ் திட்டத்தால் பாதிக்கப்பட்ட 606 குடும்பங்களில் மொத்தம் 117 குடும்பங்கள் பிடிஓ வீட்டிற்கு அல்லது எஞ்சிய வீட்டு விற்பனை திட்டத்தில் (எஸ்பிஎஃப்) இடம்பெற்றுள்ள வீட்டிற்கு மனுச் செய்துள்ளன.

அங் மோ கியோ அவென்யூ 3ல் உள்ள 562 முதல் 565 வரைப்பட்ட புளோக்குகளில் பெரும்பாலும் மூவறை, நான்கறை வீடுகள் உள்ளன. அந்த புளோக்குகள் செர்ஸ் திட்டத்திற்காக கடந்த ஏப்ரல் மாதம் தேர்வாயின.

அந்தத் திட்டத்தால் பாதிக்கப்படுவோருக்கு பக்கத்தில் இருக்கும் ஓரிடத்தில் வீடு கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அப்படி கட்டப்படும் வீடுகளுக்கான முன்பதிவு 2023 தொடக்கத்தில் தொடங்கும். செர்ஸ் திட்டத்தின்கீழ், கழகம், பழைய குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டு அவற்றைக் கையகப்படுத்தி, அவற்றுக்குப் பதிலாக புதிய வீடுகளைக் கட்டி குடியிருப்புப் பேட்டைகளைப் புதுப்பித்து வருகிறது.

செர்ஸ் திட்டப்படி பாதிக்கப்படும் வீட்டு உரிமையாளர்களுக்கு பக்கத்திலேயே 99 ஆண்டு குத்தகை காலத்துடன்கூடிய புதிய வீடு கட்டித் தரப்படும்.

அந்தத் திட்டத்தில் உள்ளடங்கும் வீடுகளுக்காக அவர்களுக்கு இழப்பீடும் கொடுக்கப்படும். மாற்று வீடுகளைப் பெற விரும்பாதவர்கள் பிடிஓ, எஞ்சிய வீட்டு விற்பனை திட்டங்களில் கலந்துகொண்டு வீடுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வீவகவின் வெளிப்படையான முன்பதிவு முறை மூலமாகவும் அவர்கள் வீடுகளைப் பெறலாம். அல்லது பொதுச் சந்தையில் மறுவிற்பனை வீடுகளையும் அவர்கள் வாங்கலாம்.

பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு பல திட்டங்களின்கீழ் முன்னுரிமை அளிக்கப்படும்.

அங் மோ கியோ செர்ஸ் திட்ட குடியிருப்பாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் மே மாதம் விற்பனைக்கு வந்த ஏழு பிடிஓ திட்ட வீடுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

சுவா சூ காங், உட்லண்ட்ஸ் உள்ளிட்ட இடங்களில் கட்டப்படும் வீடுகளுக்கான ஆகஸ்ட் மாத விற்பனையில் உள்ளடங்கும் வீடுகளுக்கும் அவர்கள் விண்ணப்பிக்க முடியும். புதிய வீடுகளுக்கு விண்ணப்பித்த 117 குடும்பங்களில் 107 குடும்பங்கள் இந்த ஏழு பிடிஓ திட்டங்களில் ஆறு திட்டங்களில் இடம்பெறும் வீடுகள் வேண்டும் என கேட்டன.

எஞ்சிய 10 குடும்பங்களும் எஸ்பிஎஃப் திட்டத்தில் உள்ளடங்கும் வீடுகளுக்கு மனு செய்துள்ளன.

இத்தகைய விற்கப்படாத வீடுகளில் முந்திய பிடிஓ விற்பனையில் கொடுக்கப்பட்ட வீடுகளும் இதர உபரி வீடுகளும் உள்ளடங்கும்.

10 விழுக்காட்டு முன்னுரிமை ஒதுக்கீட்டை தவறவிட்டுவிட்ட செர்ஸ் குடும்பங்களுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும்.

பொதுமக்களுடன் சேர்ந்து அவர்கள் வீட்டுக்கான குலுக்கலில் கலந்துகொள்ளலாம்.

இந்த வீட்டுக்கான குலுக்கல் இப்போது நடந்து வருவதாகவும் இம்மாத முடிவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!