சாலை சந்திப்பில் விபத்து: 52 வயது ஆடவர் காரில் அடிபட்டு மரணம்

சாலை சந்திப்பில் விபத்து: 52 வயது ஆடவர் காரில் அடிபட்டு மரணம்

1 mins read
9838ebc4-25f1-47f1-a0f9-b1c14472624d
-
Google News Preferred Icon

அல்ஜுனிட் ரோடும் சிம்ஸ் அவென்யூவும் சந்திக்கும் இடத்தில் நேற்று காரில் அடிபட்ட 52 வயது ஆடவர் மரணமடைந்தார். காரை ஓட்டிவந்த 86 வயது முதியவர் கைதானார்.

அலட்சியமாக வாகனத்தை ஓட்டி ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தியதாகக் கூறி காவல்துறை அவரைக் கைது செய்தது. விபத்து பற்றி நேற்றுக் காலை 6.40 மணிக்குத் தகவல் கிடைத்ததாக காவல்தறை தெரிவித்தது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்தனர்.

விபத்தில் சிக்கிய ஆடவர் மரணமடைந்து விட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த மருத்துவர் சம்பவ இடத்தில் தெரிவித்தார். புலன் விசாரணை நடப்பதாகவும் காவல்துறை கூறியது.