சிங்கப்பூர்-பிரான்ஸ் நல்லுறவு

சிங்கப்பூர்-பிரான்ஸ் நல்லுறவு

1 mins read
0cce4a48-5f22-4bb2-8fb1-1fe4cd757889
-
Google News Preferred Icon

மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமைவரை பிரான்ஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார். அவர் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர், எரிசக்தி அமைச்சர் ஆகியோரையும் தற்காப்பு, தேசிய பாதுகாப்பு தலைமைச் செயலகத்தின் தலைமைச் செயலாளரையும் சந்தித்தார்.

இணைய மிரட்டல்களை, தவறான தகவல்களைச் சமாளிப்பது, எரிசக்தி வளத்தைப் பலப்படுத்துவது போன்ற அம்சங்கள் பற்றி அவர்கள் விவாதித்ததாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூருக்கும் பிரான்சுக்கும் இடைப்பட்ட வலுவான இருதரப்பு உறவை அவர்கள் மறுஉறுதிப்படுத்தினர். ரஷ்யா-உக்ரேன் பிரச்சினை, புவிசார் அரசியல் சூழலில் அதன் காரணமாக ஏற்படக்கூடிய தாக்கங்கள் ஆகியவை பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.