தேசிய இதய வாரம்: கெட்ட கொழுப்புக்கு எதிரான போராட்டம் தீவிரம்

தேசிய இதய வாரம்: கெட்ட கொழுப்புக்கு எதிரான போராட்டம் தீவிரம்

1 mins read
cbc5901c-cc2b-42d6-a6db-7fb1dbf11428
-

ரத்தத்தில் அதிக கெட்ட கொழுப்புக்கு எதிரான தனது போராட்டத்தை தேசிய இதய நல வாரம் தீவிரப்படுத்துகிறது. இந்த ஆண்டின் தேசிய இதய நல வாரம், உலக இதய நல தினம் ஆகியவற்றையொட்டி தேசிய இதய நல அறநிறுவனம் கெட்ட கொழுப்புக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துகிறது.

இந்தப் போராட்டத்தில், ஷாப்பி போன்ற இணைய வர்த்தக பெரும் நிறுவனங்கள் துணையுடன் இதய நலப் பொருள்களை அது விளம்பரப்படுத்துகிறது.

சிங்கப்பூரில் ரத்தத்தில் அதிக கெட்ட கொழுப்பு விகிதாச்சாரம் 2010ல் 25.2% ஆக இருந்தது. இது 2020ல் 39.1% ஆக உயர்ந்துவிட்டதாக தேசிய மக்கள்தொகை சுகாதார ஆய்வு 2020 தெரிவிக்கிறது.

இதய நோய்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை செயல்களை மேம்படுத்தவும் பொதுமக்களின் புரிந்துணர்வை அதிகரிக்கவும் அவெர் தெம்பனிஸ் ஹப்பில் இரண்டு நாள் சாலைக்காட்சி நடந்தது.

அதில் கலந்துகொண்ட சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி, உடல்நலத்துக்கு ஏற்ற உணவுகளை உண்பதோடு உடற்பயிற்சிகளிலும் வழக்கமாக ஈடுபட்டால் உடலில் கெட்ட கொழுப்பு குறையும். இதய நோய்களுக்கான வாய்ப்பும் குறையும் என்று கூறினார்.