தாமதமாக விண்ணப்பிப்போருக்குப் பயண நேரத்தில் கடப்பிதழ் கிடைக்காமல் போகலாம் கடப்பிதழுக்கு மனு செய்தால் ஓரிரு வாரங்களில் பரிசீலனை

தாமதமாக விண்ணப்பிப்போருக்குப் பயண நேரத்தில் கடப்பிதழ் கிடைக்காமல் போகலாம் கடப்பிதழுக்கு மனு செய்தால் ஓரிரு வாரங்களில் பரிசீலனை

2 mins read
26a28bcf-522e-4d94-a53a-203ab0f44d3d
-

புதிய கடப்­பி­த­ழுக்கு (பாஸ்­போர்ட்) விண்­ணப்­பிக்­கும் சிங்­கப்­பூ­ரர்­கள் இப்­போது ஒன்று முதல் இரண்டு வாரங்­களில் அதை எதிர்­பார்க்­க­லாம் என்று குடி­நு­ழைவு, சோதனைச்­சா­வடி ஆணை­யம் தெரி­வித்து இருக்­கிறது.

இந்த ஆணை­யம் கடந்த மே மாதம் நாள் ஒன்­றுக்கு 7,000க்கும் மேற்­பட்ட கடப்­பி­தழ் விண்­ணப்­பங்­களைப் பெற்­றது.

காலாங் ரோட்­டில் உள்ள இந்த ஆணைய கட்­ட­டத்­திற்கு வெளியே பல­ரும் வரி­சைப்­பி­டித்து நின்­ற­னர்.

இந்த ஆண்டு முடி­வில் பய­ணம் செய்­ய­லாம் என்று திட்­ட­மி­டும் சிங்­கப்­பூ­ரர்­கள் இப்­போது கடப்­பி­த­ழுக்கு விண்­ணப்­பிக்க வேண்­டும் என்று சென்ற செவ்­வாய்க்­கி­ழமை ஆணை­யம் தெரி­வித்­தது.

பொது­வாக அக்­டோ­பர், டிசம்­பர் மாதங்­க­ளுக்கு இடை­யில் கடப்­பிதழ் விண்­ணப்­பங்­கள் உச்­சத்­தைத் தொடும். கொவிட்-19க்கு முன்பு இத்­த­கைய நிலை­தான் நில­வி­யது என்­பதை ஆணை­யம் சுட்­டிக்­காட்­டி­யது.

தாம­த­மாக விண்­ணப்­பிப்­போருக்கு குறித்த நேரத்­தில் கடப்­பி­தழ் கிடைக்­கா­மல் போக­லாம் என்று ஆணை­யம் எச்­ச­ரித்­தது.

தனக்கு வரக்­கூ­டிய விண்­ணப்­பங்­க­ளைப் பொறுத்தே பரி­சீ­லனை காலம் இருக்­கும் என்­பதை ஆணை­யம் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு நினை­வூட்டி இருக்­கிறது.

மே மாதம் விண்­ணப்­பங்­கள் அதி­க­ரித்­த­தால் அவற்­றைப் பரி­சீலிக்­க­வும் கடப்­பி­த­ழைப் பிறப்­பிக்­க­வும் இந்த ஆணை­யத்­தின் இதர துறை­க­ளைச் சேர்ந்த கிட்­டத்­தட்ட 300 அதி­கா­ரி­கள் பணி­களில் ஈடு­படுத்­தப்­பட்­ட­னர்.

சிங்­போஸ்ட் நிறு­வ­னத்­து­டன் சேர்ந்து கடப்­பி­தழ் பிறப்­பிப்பு ஆற்றலை தான் அதி­கப்­ப­டுத்­தி­யது எப்­படி என்­ப­தை­யும் ஆணை­யம் விளக்­கி­யது. இப்­படி சேர்ந்து செயல்­பட்­ட­தால் சூழ்­நிலை பெரி­தும் மேம்­பட்­ட­தாக அது கூறி­யது.

இத­னி­டையே, கிறிஸ்­மஸ், புத்­தாண்டு விடு­மு­றைக் காலம் நெருங்கு­வதைக் கருத்­தில்­கொண்டு கடப்­பி­தழ் தேவைப்­ப­டு­வோர் இப்­போதே மனு செய்ய வேண்­டும் என்று பய­ணத் துறை வல்­லு­நர்­கள் வலி­யு­றுத்தி இருக்­கி­றார்­கள்.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தாள் ஆணை பிறப்­பித்து 'மிலியு இன்­சைட்' என்ற சந்தை ஆய்வு நிறு­வ­னம் இந்த மாதம் ஓர் ஆய்வை நடத்­தி­யது.

அதில் 1,000 பேர் கலந்­து­கொண்­ட­னர். ஆண்­டின் கடைசி நான்கு மாதத்­தில் தாங்­கள் வெளி­நா­டு­க­ளுக்­குப் பய­ணம் செல்­ல­விருப்­ப­தாக கிட்­டத்­தட்ட 32% தெரி­வித்­த­னர்.

பய­ணச் சீட்­டு­க­ளுக்கு அல்­லது தங்­கு­மி­டத்­திற்குத் தாங்­கள் ஏற்­கெ­னவே முன்­ப­திவு செய்­து­விட்­ட­தா­க­வும் அவர்­கள் கூறி­னர்.