மகனின் கல்லீரல் தாய்க்கு; உறுப்பு மாற்று சிகிச்சை சாதனை

மகனின் கல்லீரல் தாய்க்கு; உறுப்பு மாற்று சிகிச்சை சாதனை

2 mins read
629dbc71-f5b0-40ba-acca-6af2b4c6f917
திரு கோ ஜுன் லி தனது கல்லீரலின் ஒரு பகுதியை தனது தாயாரான திருவாட்டி லிம் ஜெக் மெங்கிற்கு வழங்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இந்த வட்­டா­ரத்­தி­லேயே முதன்­முதலாக சிங்­கப்­பூ­ரில் கல்­லீ­ரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்­றி­க­ர­மாக நடந்து இருக்­கிறது. திரு­வாட்டி லிம் ஜெக் மெங் என்ற 61 வயது மாதின் மலக்­கு­ட­லில் புற்­று­நோய் ஏற்­பட்டு அது அவ­ரின் கல்­லீ­ர­லுக்­கும் பர­வி­விட்­டது. புற்­று­நோய் நான்­கா­வது கட்­டத்தை­யும் அடைந்­து­விட்டது. ரசா­யன சிகிச்சை பெற்று வந்த அவர், தொடர்ந்து அந்­தச் சிகிச்சை பெறு­வ­தி­லும் சிர­மம் ஏற்­பட்­டது.

அந்த மாதுக்கு கோ ஜுன் லி என்ற 22 வயது மகன் இருக்­கிறார். அவர் இப்­போது தேசிய சேவை­யாற்றி வரு­கிறார். அந்த ஒரே மகன் தன்­னு­டைய தாய்க்கு தனது கல்­லீ­ரலை தான­மா­கத் தர முன்­வந்­தார்.

அந்த மக­னின் உட­லில் இருந்து 60 முதல் 70 விழுக்­காட்டு கல்­லீரல் எடுக்­கப்­பட்டு இந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி தேசிய பல்­கலைக்­க­ழக மருத்­து­வ­மனை­யின் உறுப்பு மாற்று நிலை­யத்­தில் திரு­வாட்டி லிம்­மிற்கு வெற்­றி­க­ர­மான முறை­யில் அது பொருத்­தப்­பட்­டது.

அதற்கு முன்­ன­தாக மருத்­து­வர்­கள் அந்த மாதின் பெருங்­குடலில் இருந்து ஒரு புற்­று­நோய் கட்­டியை அகற்­றி­விட்­ட­னர்.

கல்­லீ­ரல் மாற்றி பொருத்­தப்­பட்­டதை அடுத்து திரு­வாட்டி லிம் குறைந்­த­பட்­சம் மேலும் ஐந்­தாண்டு­களுக்கு உயி­ரோடு இருப்­பார் என்­ப­தற்­கான வாய்ப்­பு­கள் 60 விழுக்­காட்­டிற்­கும் அதி­க­மாகி உள்­ளன.

2020ஆம் ஆண்டு அந்த மாதுக்கு புற்று­நோய் இருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இப்­போது அவர் முதன்­மு­த­லாக புற்று­நோ­யில் இருந்து குண­மடைந்து உள்ளார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்து ஏழு நாள்­க­ளுக்­குப் பிறகு அந்த மாது வீடு திரும்­பி­னார்.

நடப்­பது போன்ற சிறு­சிறு பயிற்­சி­களை இப்­போது அவர் செய்து வரு­கிறார். அவ­ரு­டைய மகன் முற்­றி­லும் குண­ம­டைந்­து­விட்­டார்.