செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
f2f9d6d4-7bb5-4638-b88b-439014dc4a2b
-

சாலைச் சந்திப்பில் விபத்து: 52 வயது ஆடவர் காரில் அடிபட்டு மரணம்

அல்ஜுனிட் ரோடும் சிம்ஸ் அவென்யூவும் சந்திக்கும் இடத்தில் நேற்று காரில் அடிபட்ட 52 வயது ஆடவர் மரணமடைந்தார். காரை ஓட்டிவந்த 86 வயது முதியவர் கைதானார்.

அலட்சியமாக வாகனத்தை ஓட்டி ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தியதாகக் கூறி காவல்துறை அவரைக் கைது செய்தது. விபத்து பற்றி நேற்றுக் காலை 6.40 மணிக்குத் தகவல் கிடைத்ததாக காவல்தறை தெரி வித்தது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்தனர்.

விபத்தில் சிக்கிய ஆடவர் மரணமடைந்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த மருத்துவர் சம்பவ இடத்தில் தெரிவித்தார். புலன் விசாரணை நடப்பதாகவும் காவல்துறை கூறியது.

சிங்கப்பூர்-பிரான்ஸ் நல்லுறவு

மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், கடந்த செவ்வாய்க் கிழமை முதல் சனிக்கிழமைவரை பிரான்ஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார். அவர் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர், எரிசக்தி அமைச்சர் ஆகியோரையும் தற்காப்பு, தேசிய பாதுகாப்பு தலைமைச் செயலகத்தின் தலைமைச் செயலாளரையும் சந்தித்தார்.

இணைய மிரட்டல்களை, தவறான தகவல்களைச் சமாளிப்பது, எரிசக்தி வளத்தைப் பலப்படுத்துவது போன்ற அம்சங்கள் பற்றி அவர்கள் விவாதித்ததாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூருக்கும் பிரான்சுக்கும் இடைப்பட்ட வலுவான இருதரப்பு உறவை அவர்கள் மறுஉறுதிப்படுத்தினர். ரஷ்யா-உக்ரேன் பிரச்சினை, புவிசார் அரசியல் சூழலில் அதன் காரணமாக ஏற்படக்கூடிய தாக்கங்கள் ஆகியவை பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.

கெட்ட கொழுப்புக்கு எதிரான போராட்டம் தீவிரம்

ரத்தத்தில் சேரும் அதிக கெட்ட கொழுப்புக்கு எதிரான தனது போராட்டத்தை தேசிய இதய நல வாரம் தீவிரப்படுத்துகிறது. இந்த ஆண்டின் தேசிய இதய நல வாரம், உலக இதய நல தினம் ஆகியவற்றையொட்டி தேசிய இதய நல அறநிறுவனம் கெட்ட கொழுப்புக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துகிறது.

இந்தப் போராட்டத்தில், ஷாப்பி போன்ற இணைய வர்த்தக பெரும் நிறுவனங்கள் துணையுடன் இதய நலப் பொருள்களை அது விளம்பரப்படுத்துகிறது.

சிங்கப்பூரில் ரத்தத்தில் அதிக கெட்ட கொழுப்பு விகிதாச்சாரம் 2010ல் 25.2% ஆக இருந்தது. இது 2020ல் 39.1% ஆக உயர்ந்துவிட்டதாக தேசிய மக்கள்தொகை சுகாதார ஆய்வு 2020 தெரிவிக்கிறது.

இதய நோய்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை செயல்களை மேம்படுத்தவும் பொதுமக்களின் புரிந்துணர்வை அதிகரிக்கவும் அவெர் தெம்பனிஸ் ஹப்பில் இரண்டு நாள் சாலைக்காட்சி நடந்தது.

அதில் கலந்துகொண்ட சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி, உடல்நலத்துக்கு ஏற்ற உணவுகளை உண்பதோடு உடற்பயிற்சிகளிலும் வழக்கமாக ஈடுபட்டால் உடலில் கெட்ட கொழுப்பு குறையும். இதய நோய்களுக்கான வாய்ப்பும் குறையும் என்று கூறினார்.

கடற்கரையில் குப்பை அகற்றம்

தென்­கி­ழக்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த ஏறக்­கு­றைய 200 பேர் நேற்று ஈஸ்ட் கோஸ்ட் பூங்­காவை சுத்­தப்படுத்­தி­னர். சேக­ரிக்­கப்­படும் குப்­பைகூளங்­களை மறுபுழக்­கத்­திற்கு பயன்­ப­டுத்­தவது பற்றி அவர்­கள் தெரிந்­து­கொண்டனர்.

அனைத்­து­லக கடற்­கரை துப்­பு­ரவு தினம் 2022ஐ ஒட்டி ஏற்­பாடு செய்­யப்­பட்ட அந்த நிகழ்ச்­சி­யில் கலந்து கொண்டவர்­கள் ஏறக்­கு­றைய 90 கிலோ­ குப்­பைகூளங்­களைச் சேக­ரித்­த­னர். துடுப்­புப் பட­கு­களில் சென்று சுமார் 40 பேர் கட­லில் இருந்­தும் கழி­வு­களை அப்­பு­றப்­ப­டுத்­தி­னர்.

தென்­கி­ழக்கு மாவட்ட மேயர் ஃபாமி அலி­மான், நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான செரில் சான், ஹெங் சுவீ கியட், ஜெசிகா டான், டான் சுவான்-ஜின், டான் கியட் ஹாவ், டின் பெய் லிங் ஆகி­யோரும் நேற்­றைய நிகழ்ச்­சி­யில் கலந்து­கொண்­ட­னர்.

இத­னி­டையே, சிங்­கப்­பூ­ருக்­கான ஐரோப்­பிய ஒன்­றிய குழுமம் ஏற்­பாட்­டில் ஈஸ்ட் கோஸ்ட் பூங்­கா­வில் நேற்­றுக் காலை நடந்த துப்­பு­ரவு நிகழ்ச்­சி­யில் கிட்­டத்­தட்ட 100 பேர் கலந்­து­கொண்­டார்­கள்.