அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

1 mins read
e73ccfba-6d5a-4346-aa9b-6299c599c2d6
போக்குவரத்து அமைச்சரும் வர்த்தக, தொழில் அமைச்சில் வர்த்தக உறவுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு எஸ் ஈஸ்வரன், தமிழ் நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலினைச் சந்தித்துள்ளார். படம்: டுவிட்டர்/மு.க.ஸ்டாலின் -

போக்குவரத்து அமைச்சரும் வர்த்தக, தொழில் அமைச்சில் வர்த்தக உறவுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு எஸ் ஈஸ்வரன், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துள்ளார்.

அச்சந்திப்பு குறித்து திரு ஸ்டாலின் தமது டுவிட்டர் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 18) அன்று பகிர்ந்துகொண்டார்.

சிங்கப்பூருக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலான கலாசார, பொருளியல் உறவுகளை வலுப்படுத்துவது பற்றி இருவரும் ஆக்ககரமாகப் பேச்சு நடத்தியதாக திரு ஸ்டாலின் பதிவிட்டார்.

தமிழக முதலமைச்சர் பொன்னாடை போர்த்தி திரு ஈஸ்வரனை வரவேற்றார்.

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையில் இந்தியா சென்றுள்ள அமைச்சர் குழுவில் திரு ஈஸ்வரன் கலந்துகொண்டுள்ளார்.

புது­டெல்­லி­யில் நடை­பெ­றும் முதல் இந்­திய-சிங்­கப்­பூர் அமைச்­சர்நிலை வட்­ட­மேசை மாநாட்­டில் அவர்கள் நேற்று கலந்துகொண்டனர்.