கோத்தா திங்கி காட்டில் காணாமல்போய் கண்டுபிடிக்கப்பட்ட சிங்கப்பூரர்

கோத்தா திங்கி காட்டில் காணாமல்போய் கண்டுபிடிக்கப்பட்ட சிங்கப்பூரர்

1 mins read
fb3af5b9-a8a9-4d19-9fc2-cac068826670
மலேசியாவின் கோத்தா திங்கி வட்டாரத்தில் உள்ள ஹுத்தான் பந்தாய் வனப்பகுதியில் காணாமல் போன சிங்கப்பூரரை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.  படம்: கோத்தா திங்கி காவல்துறை -

மலேசியாவின் கோத்தா திங்கி வட்டாரத்தில் உள்ள ஹுத்தான் பந்தாய் வனப்பகுதியில் காணாமல் போன சிங்கப்பூரரை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அவர் ஜேசன் ரென் ஜீ எனும் 33 வயது ஆடவர் என்று மலேசியக் காவல்துறை கூறியது.

சனிக்கிழமை பிற்பகல் 3.26 மணிக்கு இதுகுறித்துத் தகவல் கிடைத்தது.

உடனே தேடல், மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டது.

பின்னர் ஆடவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.15 மணிக்குக் கண்டுபிடிக்கப்பட்டார் என்று சைனா பிரஸ் எனும் ஊடகம் தெரிவித்தது.

அவர் பாதுகாப்பாக வனத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று ஜோகூர் வனத்துறை கூறியது.

இதற்கிடையே, அனுமதியின்றி அந்த வனப்பகுதியில் நுழைந்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய வனத்துறை தெரிவித்துள்ளது.

திரு ஜேசனுடன் இந்தப் பயணத்தில் அவரது மலேசிய நண்பர் டெங் ஜி பாவ் ஈடுபட்டிருந்தார்.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு அனுமதி பெற்று, வழிகாட்டியுடன் செல்லும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது.