பொது வீடமைப்புக்கு வழிவிடும் கார் நிறுத்துமிடம், வனப் பகுதி

பொது வீடமைப்புக்கு வழிவிடும் கார் நிறுத்துமிடம், வனப் பகுதி

1 mins read
f88c2f4f-ef88-42d3-8f00-1c98b8a30b1e
-

பாசிர் ரிஸ் பூங்காவின் 2.9 ஹெக்டர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் வீவக வீடுகள்

பாசிர் ரிஸ் பூங்­கா­வின் 2.9 ஹெக்­டர் நிலப்­ப­ரப்பு பொது வீட­மைப்­புக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அதில் ஒரு பகுதி பூங்­கா­வின் கார் நிறுத்­து­மி­ட­மா­கத் தற்­போது பயன்­படுத்­தப்­படும் இடம்.

பூங்­கா­வின் கார் நிறுத்­து­மி­டம் Bயில் (படம்) 20 கார்­களை நிறுத்­து­வ­தற்­கான இட­மும் 10 மோட்­டார் சைக்­கிள்­களை நிறுத்­து­வ­தற்கு உரிய இட­மும் தற்­போது பொது வீட­மைப்­புக்கு ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாக நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

இந்த நிலப்­ப­ரப்பு ஏறத்­தாழ நான்கு காற்­பந்­துத் திடல்­க­ளுக்­குச் சம­மா­னது. பொது வீட­மைப்­புக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள மொத்­தம் 2.9 ஹெக்­டர் நிலப்­ப­கு­தி­யில் இது கிட்­டத்­தட்ட மூன்­றில் ஒரு பங்கு.

எஞ்­சிய நிலம் இப்­போது வனப்­பகு­தி­யாக இருக்­கிறது. ஆனால் அது பூங்­கா­விற்­குள் இல்லை. கட்­டு­மா­னம், போக்­கு­வ­ரத்து உள்­கட்­ட­மைப்பு ஆகி­ய­வற்­றுக்­காக ஒதுக்­கப்­பட்ட நிலப்­ப­கு­தி­யோடு சேர்ந்து இதி­லும் வனப்­ப­குதி அமைந்து ­உள்ளது.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்­ர­லில் இந்­தப் பகு­தி­யில் வீடு­க­ளைக் கட்­டு­வது குறித்து இயற்கை வளம் சார்ந்த குழுக்­க­ளைக் கலந்து ஆலோ­சித்­த­தாக, சிங்­கப்­பூர் இயற்கை நலச் சங்­கத்­தின் தலை­வர் ஷான் லம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் பகிர்ந்து­கொண்­டார்.

அதில் முன்­வைக்­கப்­பட்ட ஆலோ­ச­னை­க­ளைக் கருத்­தில்­கொண்டு கழ­கம் நிலப்­ப­ரப்­பின் அள­வைச் சரி­செய்­து­கொண்­ட­தாக அவர் கூறி­னார். அத­னால் குறை­வான வனப்­ப­கு­தியே பாதிக்­கப்­படு­கிறது. இதில் மொத்­தம் 580 முதல் 640 வீடு­கள் வரை கட்ட இய­லும்.