கோத்தா திங்கியில் காணாமல்போய் கண்டுபிடிக்கப்பட்ட சிங்கப்பூரர்

கோத்தா திங்கியில் காணாமல்போய் கண்டுபிடிக்கப்பட்ட சிங்கப்பூரர்

1 mins read
2579c80f-ff33-43f5-8efc-7a4efe72a49c
-

மலே­சி­யா­வின் கோத்தா திங்கி வட்­டா­ரத்­தில் உள்ள ஹுத்­தான் பந்­தாய் வனப்­ப­கு­தி­யில் நெடுந்­தொ­லைவு நடைப்­ப­ய­ணம் மேற்­கொண்­ட­போது காணா­மற்­போன 33 வயது சிங்­கப்­பூர் ஆட­வர் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளார். ஜேசன் ரென் ஜீ என்று அடை­யா­ளம் காணப்­பட்ட ஆட­வர் குறித்­து நேற்று முன் தினம் பிற்­ப­கல் 3.26 மணிக்­குத் தக­வல் கிடைத்­த­தாக மலே­சி­யக் காவல்­துறை கூறி­யது. தேடல், மீட்­புப் பணி­கள் முடுக்­கி­வி­டப்­பட்­ட­தை­ய­டுத்து நேற்று பிற்­ப­கல் 3.15 மணி­ய­ள­வில் அவர் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

இதற்­கி­டையே, அனு­ம­தி­யின்றி அந்த வனப்­ப­கு­தி­யில் நுழைந்­த­வர்­கள்­மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று மலே­சிய வனத்­துறை தெரி­வித்­துள்­ளது.

திரு ஜேச­னு­டன் இந்­தப் பய­ணத்­தில் அவ­ரது மலே­சிய நண்­பர் டெங் ஜி பாவ் ஈடு­பட்­டு இருந்­தார். இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளுக்கு அனு­மதி பெற்று, வழி­காட்­டி­யு­டன் செல்­லும்­படி ஆலோ­சனை கூறப்­பட்­டுள்­ளது.