புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு ஓட்டத்தின் மூலம் $1 மி. நிதித் திரட்டு

புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு ஓட்டத்தின் மூலம் $1 மி. நிதித் திரட்டு

2 mins read
5ad7b485-4364-4782-9d6c-91675744acc1
ஈராண்டுகளுக்குப் பிறகு நேரடியாக நடைபெற்ற ஓட்டத்தை, கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புற்­று­நோய்க்கு எதி­ரான போராட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்­கும் நோக்­கத்­து­டன் நேற்­றுக் காலை நடை­பெற்ற ஓட்­டத்­தின் மூலம் ஏறத்­தாழ ஒரு மில்­லி­யன் வெள்ளி நிதி திரட்­டப்­பட்­டுள்­ளது.

14வது சிங்­டெல்-சிங்­கப்­பூர் புற்று­நோய்ச் சங்­கத்­தின் புற்­று­நோய்க்கு எதி­ரான ஓட்­டம், ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு நேரடி நிகழ்ச்­சி­யாக நேற்று நடை­பெற்­றது. கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வலை முன்­னிட்டு கடந்த இரண்டு ஆண்­டு­க­ளி­லும் அது மெய்­நி­கர் முறை­யில் இடம்­பெற்­றது.

ஐந்து கிலோமீட்­டர், 10 கிலோ மீட்­டர், 15 கிலோமீட்­டர் என மூன்று பிரி­வு­க­ளாக நடை­பெற்ற ஓட்ட நிகழ்ச்­சியை, ஈஸ்ட் கோஸ்ட் பூங்­கா­வில் இருந்து கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் கொடி­ய­சைத்­துத் தொடங்கி வைத்­தார்.

இந்த ஆண்டு 1.25 மில்­லி­யன் வெள்­ளி­யைத் திரட்­டும் இலக்­கு­டன் இடம்­பெ­றும் இந்­நி­கழ்ச்சி, அடுத்த ஒரு வாரத்­துக்கு மெய்­நி­கர் முறை­யில் இடம்­பெ­று­வ­தா­கக் கூறப்­பட்­டது.

'ஸ்ட்­ராவா' செய­லி­யைப் பயன்­ப­டுத்தி இம்­மா­தம் 25ஆம் தேதி வரை இதில் பங்­கேற்­க­லாம்.

நேற்­றைய நேரடி ஓட்­டத்­தில் 3,000க்கும் மேற்­பட்­டோர் கலந்­து­கொண்­ட­னர்.

லெட்ஸ் ரைட்! சிங்­கப்­பூர்

நிதித் திரட்டு சைக்­கி­ளோட்­டம்

இதற்­கி­டையே, புற்­று­நோ­யா­ளி­களுக்கு நிதி திரட்­டும் 'லெட்ஸ் ரைட்! சிங்கப்பூர்' சைக்­கி­ளோட்­ட­மும் நேற்­றுக் காலை நடை­பெற்­றது.

துடிப்­பு­மிக்க வாழ்க்­கை­முறை, நோய்த் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் ஆகி­ய­வற்றை ஊக்­கு­விக்­கும் இலக்­கு­டன் 650க்கும் மேற்­பட்ட சைக்­கி­ளோட்­டி­கள் இதில் கலந்­து­கொண்­ட­னர். இவர்­கள் அனை­வ­ரும் சேர்ந்து மொத்­தம் 38,902 கிலோ மீட்­டர் தொலைவை சைக்­கி­ளில் கடந்­த­னர்.

ஏற்­பாட்­டா­ள­ரான 'மிர்க்­சஸ்' நிறு­வ­னம் $50,000 நன்­கொ­டை­யு­டன் சைக்­கி­ளோட்­டி­கள் கடக்­கும் ஒவ்­வொரு கிலோமீட்­ட­ருக்­கும் ஈடாக ஒரு வெள்ளி தர உறு­தி­ அ­ளித்­தி­ருந்­தது. இதன்மூலம், $88,902 நிதி திரட்­டப்­பட்­டது. இந்த நிதி சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­கலைக்­க­ழக புற்­று­நோய் சிகிச்சை நிலை­யத்­தின் புற்­று­நோய் அற­நிதிக்கு வழங்­கப்­படும்.

புற்று நோயா­ளி­க­ளுக்­கான சிகிச்­சைக்கு கட்­டண மானி­யம் வழங்க இது பயன்­ப­டுத்­தப்­படும்.

இந்த அற­நி­தி­யின் மூலம் ஆண்டுதோறும் 60 நோயா­ளி­கள் நிதி­யு­தவி பெறு­வ­தா­கக் கூறப்­பட்டது.

அடுத்த மூன்று ஆண்­டு­களில் இத்­த­கைய உத­வி­யைத் தொடர்­வ­தற்­கும் புற்­று­நோய் தொடர்­பான ஆய்­வு­கள், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் சேவை­யா­ளர்­க­ளின் பயிற்சி ஆகி­ய­வற்­றுக்கு நிதி வழங்­க­வும் 20 மில்­லி­யன் வெள்­ளி­யைத் திரட்ட இலக்கு வகுக்­கப்­பட்­டுள்­ளது.