ஆய்வு: பதின்ம வயதுப் பிள்ளைகளிடையே வயது ஏற ஏற நூல் வாசிக்கும் ஆர்வம் குறைகிறது

ஆய்வு: பதின்ம வயதுப் பிள்ளைகளிடையே வயது ஏற ஏற நூல் வாசிக்கும் ஆர்வம் குறைகிறது

1 mins read
ce8a3944-7fb2-4522-ba2b-8ce2b1d9df4a
தொடக்கப் பள்ளியில் பயின்றபோது மிக ஆர்வமாகப் புத்தகங்களைப் படித்ததாகவும் தற்போது வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டதாகவும் கூறுகிறார் 16 வயது பவேஷ் பாலாஜி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் பதின்ம வய­தி­னர் புத்­த­கம் படிக்­கும் பழக்­கம் மிக­வும் குறைந்­துள்­ள­தா­க­வும் வயது ஏற, ஏற அந்த ஆர்­வம் குன்­று­வ­தா­க­வும் தெரி­ய­வந்­துள்­ளது.

பெரும்­பா­லான பதின்ம வயது இளை­யர்­கள் வயது ஏறும்­போது அறவே புத்­த­கம் படிப்­பது இல்லை. வேறு பல வேலை­க­ளைச் செய்­வ­தி­லேயே அவர்­கள் நேரத்­தைச் செல­வி­டு­வ­தாக அண்­மைய ஆய்வு கண்­ட­றிந்­துள்­ளது.

தேசி­யக் கல்­விக் கழ­கம், சென்ற ஆண்டு 5,700 உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் வாசிப்­புப் பழக்­கம் குறித்த ஆய்வை நடத்­தி­யது.

இதில், உயர்­நி­லைப் பள்­ளி­களின் மேல் வகுப்பு மாண­வர்­களில் வெகு சிலரே புத்­த­கங்­களை வாசிப்­பது தங்­க­ளுக்­குப் பிடித்­தி­ருக்­கிறது என்று பதிவு செய்­துள்­ள­னர்.

உயர்­நி­லைப் பள்ளி முதல் ஆண்­டில் பயி­லும் 59 விழுக்­காட்டு மாண­வர்­கள் அன்­றா­டமோ இரண்டு நாள்­க­ளுக்கு ஒரு­மு­றையோ நூல் வாசிப்­பில் ஈடு­ப­டு­வ­தாக ஆய்­வில் தெரி­வித்­துள்­ள­னர். உயர்­நி­லைப் பள்ளி நான்­காம் ஆண்டு மாண­வர்­க­ளி­டையே இந்த விகிதம் 39.8 விழுக்காடு மட்­டுமே.

உயர்­நி­லைப் பள்ளி முதல் அல்­லது இரண்­டாம் ஆண்­டுக்­குப் பிறகு மாண­வர்­க­ளின் வாசிப்பு ஆர்­வம் நீர்த்­துப்போவ­தாக ஆய்வு கூறு­கிறது. புத்­த­கங்­கள் படிப்­ப­தில் ஆர்­வம் காட்­டும் பதின்ம வய­தி­னர் அதற்கு முன்­வைக்­கும் கார­ணங்­கள் வாசிக்­கப் பிடித்­தல், பொழுது­போக்கு, மொழி வளத்தை அதி­க­ரித்­தல் ஆகி­யவை.

மின்­னி­யல் சாதங்­க­ளின்­பால் ஈர்க்­கப்­ப­டு­த­லும் பள்ளி நட­வ­டிக்­கை­கள் அதி­க­ரித்­த­லும் வாசிப்பு ஆர்­வம் குறை­வதற்கான கார­ணங்­களாக இருக்­கக்­கூ­டும் என்று கருதப்­ப­டு­கிறது.