காவல் துறை அதிகாரி ஒருவர் இன்று மரினா பே சாண்ட்ஸ் கடைத்தொகுதியில் மாண்டு காணப்பட்டார். அந்த 29 வயதான ஆடவர் தன்னைத்தானே சுட்டுகொன்றதாக நம்பப்படுகிறது.
மத்திய காவல்துறை பிரிவை சேர்ந்த அந்த அதிகாரி துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் காணப்பட்டதாக காவல் துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.
இன்று காலை 9.44 மணியளவில் சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டது. சம்பவ இடத்தில் துப்பாக்கி ஒன்று கண்டறியப்பட்டது.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை எனறு காவல் துறை மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல் துறை விசாரணை தொடர்கிறது.

