செவ்வாய்க்கிழமை (20 செப்டம்பர்) இரவு 11 மணி முதல் மறுநாள் காலை வரை காஸ்வே கடற்பாலம் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு மூடப்பட்டிருக்கும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.
அதையொட்டி சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்லும் மோட்டார் சைக்கிளோட்டிகள் துவாஸ் இரண்டாம் இணைப்பைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
செவ்வாய்க்கிழமை இரவு 11.59 முதல் மறுநாள் அதிகாலை நான்கு மணி வரை மலேசியாவின் 'பாங்குனன் சுல்தான் சிஐகியு காம்பிளெக்ஸ்' நிலையத்தில் அறிவிப்புப் பலகைகள் மாற்றப்படவுள்ளதால் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு காஸ்வே பாலம் சில மணிநேரம் மூடப்பட்டிருக்கும் என்று திங்கட்கிழமையன்று (19 செப்டம்பர்) ஆணையம் ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
மேல்விவரங்களைத் தெரிந்துகொள்ள தனது ஃபேஸ்புக் பக்கத்தை நாடுமாறு ஆணையம் மோட்டார் சைக்கிளோட்டிகளைக் கேட்டுக்கொண்டது.

