செப்டம்பர் மாதம் வாகனங்களுக்கான பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்துள்ளன.
சினோபெக், எஸ்பிசி பெட்ரோல் நிலையங்களில் டீசல் விலை லிட்டருக்கு 2.76 வெள்ளிக்குக் குறைந்தது.
இதர பெட்ரோல் நிலையங்களில் டீசல் விலை 2.77 விலைக்குக் குறைந்தது.
சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் பெட்ரோல், டீசல் விலைகளைக் கண்காணிக்கும் 'ஃபியூவெல் காக்கி' இந்த விவரங்களைத் தெரிவித்தது.
எல்லா வகை பெட்ரோல் விலைகளும் லிட்டருக்கு ஆறு காசு குறைந்தன.
சினோப்பெக்கின் 98-அக்டேன் பெட்ரோல் மட்டும் இதற்கு விதிவிலக்கு.
மூன்று வாரங்களுக்கு முன்பு பதிவானதைக் காட்டிலும் அதன் விலை லிட்டருக்கு 19 காசு சரிந்தது.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் அதிகரித்திருந்த பெட்ரோல், டீசல் விலைகள் செப்டம்பர் மாதம் குறைந்துள்ளன.


